கணவருக்கு தெரியாமல் கல்யாணம்.. மதுரையில் உல்லாசம்.. இன்ஸ்டாவில் படம் போட்டு சிக்க வைத்த இளைஞர்கள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் கணவருக்கு தெரியாமல் இளைஞர் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார் இளம் பெண்.. ஆனால் அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளதால் விஷயம் அம்பலத்துக்கு வந்தள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவன், காத்திருந்து பழிவாங்கியுள்ளார்.
திருமணத்தை மீறிய உறவுகள் இப்போது சர்வ சாதாரணமாகி வருகிறது. கணவனை பிடிக்காத மனைவி, வேறு ஒருவருடன் தொடர்பு வைப்பது, மனைவியை பிடிக்காத கணவன், வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்ற எண்ணமோ, ஒருவரை ஒருவர் புரிந்து அனுசரித்து வாழ வேண்டும் என்ற எண்ணமோ குறைந்துவிட்டது.

பெண்களை அடிமையாக நடத்த வேண்டும் என்ற குணத்துடன் சுற்று ஆண்களும், ஆடம்பர வாழ்க்கைக்காக எந்த எல்லைக்கும் போகும் சில பெண்களும் வாழ்வில் பெரும் சிக்கலை சந்திக்கிறார்கள். திருமணத்தை மீறிய உறவுகள் தொடர்பான சிக்கலில் இந்த இரண்டு தான் பெரிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்தை மீறி உறவு என்பதை தாண்டி, கணவனுக்கு தெரியாமல் இன்னொவருரை திருமணம் செய்யும் அளவிற்கு ஒரு பெண் போயிருக்கிறார். அது இன்ஸ்டாகிராமில் தெரியவந்து கடைசியில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த பாலு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற கூலித்தொழிலாளிக்கு 47 வயது ஆகிறது. பாலுக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகன், 2 மகள்களும் இருக்கிறார்கள். மகன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பாலுவின் மனைவி இன்ஸ்டாகிராம் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்துள்ளார்.
இன்ஸ்டாவில் மதுரையை சேர்ந்த இளைஞருடன் பாலுவின் மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது., திருமணமாகி தனக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள் என்பதை மறைத்து அந்த இளைஞருடன் ஜாலியாக பேசி சிரித்து மகிழ்ந்துள்ள்ர். ஒரு கட்டத்தில் இளைஞரை நேரில் அழைத்து தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளார். அப்படி அடிக்ககடி கள்ளக்காதலனை சந்திப்பதை தன்னுடைய கணவருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டாராம்.
அவருடைய உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு மதுரைக்கு சென்று வாலிபரை அடிக்கடி சந்தித்து குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். இதற்கிடையே மதுரை வாலிபருடன், அந்த பெண் திருமணம் செய்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதை பார்த்து அந்த பெண்ணின் கணவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு உள்ளது என்பதை அறிந்து துடிதுடித்து போன பாலு மனைவிக்காக காத்திருந்தார். மதுரைக்கு சென்ற தனது மனைவி ஒரு வாரம் கழித்து நேற்று முன்தினம் காலையில் ஆரல்வாய்மொழிக்கு தனது கணவர் வீட்டிற்கு எதுவும் தெரியாதது போல் வந்துள்ளார்.
வீட்டுக்கு வந்த மனைவியிடம், அவர் கள்ளக்காதல் பற்றி கேட்க அவர்களுக்கிடையே தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்து இஞ்சி, பூண்டு இடிக்க பயன்படுத்தப்படும் சிறிய குழவிக் கல்லால் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே மதுரை வாலிபருடன் திருமணம் செய்தது போன்ற பெண்ணின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டது யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications