கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் மானியம் பெற இணையதளத்தில் விண்ணப்பிப்பது எப்படி? கலெக்டர் விளக்கம்
கன்னியாகுமரி: விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் மானியம் வழங்கப்பட உள்ளது. மானியம் பெற விரும்பும் விவசாயிகள் இணையதளம் வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே மானியங்கள் பெற முடியும் என்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தோட்டக்கலை துறையின் கீழ் 2025-26-ம் ஆண்டு மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.57,82,500 ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தென்னை பரப்பு விரிவாக்கத்தின் கீழ் 150 ஹெக்டர் இலக்கு பெறப்பட்டு ரூ.18 லட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

ஒரு ஹெக்டருக்கு 50 சதவீதம் மானியமாக ரூ.12 ஆயிரம் வீதம் தென்னங்கன்றுகள், ஊடுபயிராக தட்டைபயறு விதைகள் போன்றவற்றிற்கு மானியம் வழங்கப்படும். செடி மிளகு பரப்பு விரிவாக்கத்தின் கீழ் 1 ஹெக்டர் இலக்கு பெறப்பட்டு ரூ.40 ஆயிரம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டருக்கு 40 சதவீதம் மானியமாக ரூ.40 ஆயிரம் வீதம் செடிமிளகு கொடிகள் வழங்கப்படும்.
ரோஜா பரப்பு விரிவாக்கத்தின் கீழ் 5 ஹெக்டர் இலக்கு பெறப்பட்டு ரூ.60 ஆயிரம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டங்களில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் இணையதளம் வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே மானியங்கள் பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இதற்காக (https://www.tnhorticulture.tn.gov.in) என்ற இணையதளம் மூலம் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு அம்மாபேட்டை சவிதா.. தாய் வீட்டுக்கு போக ஆசைப்பட்டு.. கடைசியில் இப்படியா ஆகணும்
சேலம் விவசாயிகளுக்கு அறிவிப்பு
சேலம் மாவட்டம் சங்ககிரி, கொங்கணாபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சரஸ்வதி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில்:- சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, கொங்கணாபுரம், நங்கவள்ளி, மேச்சேரி, மகுடஞ்சாவடி, அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் மாங்கனி சாகுபடி செய்துள்ளனர். இதில் சங்ககிரி, தேவூர் சுற்றுவட்டாரத்தில் 1,500 ஹெக்ேடரும், கொங்கணாபுரம் வட்டாரத்தில் 400 ஹெக்டேரும் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது, இதில் அல்போன்சா, பெங்களூரா போன்ற ரகங்கள் மாம்பழ கூழ் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இமாம்பசந்த், மல்கோவா, பங்கனப்பள்ளி, சேலம் பெங்களூரா போன்ற பழங்களும் அடங்கும்.
இந்த ஆண்டு அதிகமான மா உற்பத்தி மற்றும் சந்தையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக மாம்பழம் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியை தடுக்கும் வகையில் சங்ககிரி, தேவூர், கொங்கணாபுரம் வட்டாரத்தில் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சங்ககிரி, கொங்கணாபுரம் வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள அல்போன்சா, பெங்களூரா ரகங்களில் இருந்து பழக்கூழ் தயாரித்து வெளி மாநிலங்களில் விற்பனைக்கு அனுப்ப முடியும். இந்த தொழிற்சாலை அமைக்க ரூ.35 லட்சம் வரை செலவாகும். இதற்கு மானியமாக ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களை சங்ககிரி, கொங்கணாபுரம் தோட்டக்கலை துறை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு விவசாயிகள் பெற்று கொள்வதுடன், மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க மானியம் பெற்று பயன் அடையலாம்" இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications