ரூ.5 லட்சம் தரும் தமிழக அரசு.. கல்பனா சாவ்லா விருது.. விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
கன்னியாகுமரி: துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான "கல்பனா சாவ்லா விருது" ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால், சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது.இந்த விருதுடன் 5லட்சம் ரூபாய் பணமும் அரசு தருகிறது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது.
துணிவு மற்றும் வீர சாகச் செயல்களக்கான "கல்பனா சாவ்லா விருது" ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால், சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன், ரூபாய் 5 இலட்சத்திற்கான வரைவு காசோலை, சான்றிதழ் மற்றும் பதக்கம் அடங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.

துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும்.கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இணையதளத்தில் அதற்கென உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளடக்கி இருக்க வேண்டும்.
மேலும் "கல்பனா சாவ்லா"விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகப்ட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) தெளிவாகவும், தேவையான அனைத்து விவரங்களும் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
இதுபற்றி கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் துணிச்சல் மற்றும் தைரியமாக செயல்பட்ட தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட பெண்ணிற்கு சுதந்திர தினவிழா அன்று கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது, தமிழ்நாடு அரசு நாசாவில் முதல் விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் நினைவாக அவரது துணிச்சல் மற்றும் துணிச்சலான முயற்சியை பாராட்டும் வகையில் இவ்விருது ஆண்டுதோறும் துணிச்சலான முயற்சியை வெளிப்படுத்தும் பெண்ணிற்கு வழங்கப்பட்டு வருகிறது.
கல்பனா சாவ்லா விருது பொதுத்துறையில் இருந்து சமூகநலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விருதானது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினவிழாவின் போது முதல்-அமைச்சரால் தைரியம் மற்றும் துணிச்சலான முயற்சியை வெளிப்படுத்தும் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணிற்கு வழங்கப்படும். இதில் கல்பனா சாவ்லா விருது 2024-ம் விருது, தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப்பதக்கம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பரிசாக வழங்கப்படும்.
இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் https://awards.tn.gov.in விண்ணப்பித்து அதன் நகலினை குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடம், தரைதளத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் 04652-278404" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2023ம் ஆணடு கல்பனா சாவ்லா விருது யாருக்கு கிடைத்தது; உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த நா.முத்தமிழ்ச்செல்விக்கு வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது..












Click it and Unblock the Notifications