கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்படியும் ஒரு பெண்ணா.. திமுக பிரமுகர் கொலையில் திடீர் திருப்பம்.. குமரியில் பரபரப்பு

பெற்ற தந்தையை கூலிப்படை ஏவி கொன்ற மகள் கைதானார்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: திமுக பிரமுகரை வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.. இது தொடர்பாக 3 பேர் கைதாகி உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே செம்பன்விளை என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் குமார் சங்கர்... இவர் ஒரு எலக்ட்ரீசியன்.. ரீத்தாபுரம் பேரூர் திமுக கிளை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்த நிலையில், 2 நாளைக்கு முன்பு, இரவு 8 மணி அளவில், வேலையை முடித்துவிட்டு, குமார்சங்கர் வீட்டிற்கு பைக்கில் வந்துள்ளார்...

ஆடு திருடர்களை நள்ளிரவில் பைக்கில் துரத்திய எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை.. திருச்சியில் அதிர்ச்சி! ஆடு திருடர்களை நள்ளிரவில் பைக்கில் துரத்திய எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை.. திருச்சியில் அதிர்ச்சி!

 குடிபோதை

குடிபோதை

அப்போது எதிரே ஒரு நபர் குமார் சங்கரை வழிமறித்துள்ளார்.. அவர் ஏற்கனவே மதுபோதையில் இருந்திருக்கிறார்.. குமார்சங்கரிடம், "இங்கே எங்காவது சரக்கு கிடைக்குமா" என்று கேட்டுள்ளார்.. அதற்கு குமார் சங்கர், இங்கு எங்கியும் கிடைக்காது, என்று சொல்லி விட்டு நடந்து சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றபோது, அந்த ரோட்டின் இருபுறமும் மறைந்து நின்று கொண்டிருந்த மர்மநபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் குமார்சங்கரை சரமாரியாக வெட்டி உள்ளனர்..

சடலம்

சடலம்

இதில் ரத்த வெள்ளத்தில் குமார்சங்கர் சம்பவ இடத்திலேயே சரிந்து உயிரிழந்தார்... பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது... குமார்சங்கர் வீட்டிற்கு அருகிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்ய கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது..

 முன்விரோதம்

முன்விரோதம்

குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர்.. குமார் சங்கர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என தீவிர விசாரணை இந்த 2 நாட்களாகவே நடந்து வந்த நிலையில், தற்போது உண்மை குற்றவாளி பிடிபட்டுள்ளார்... போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளன.. பெற்ற மகளே, குமார்சங்கரை கொன்றுள்ளது தெரியவந்துள்ளது..

 குடிபோதை

குடிபோதை

குமார்சங்கரை குடிபோதையில் அடிக்கடி வீட்டில் வந்து துன்புறுத்தி வந்ததால், அவரை தீர்த்து கட்ட, மகள் தீபாவதி முடிவு செய்துள்ளார்.. இவர் குமார்சங்கரின் மூத்த மகள் தீபாவதி ஆவார்.. எம்.எட் பட்டதாரியும்கூட.. அப்பாவை கொல்வதற்காக, திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த தன்னுடைய 18 வயது நண்பர் கோபு என்பவரிடம் விஷயத்தை சொல்லி உள்ளார்.. அதற்கு கோபு, தனக்கு தெரிந்த நண்பரான ஸ்ரீ முகுந்தன் என்ற இளைஞரை தொடர்புகொண்டு கொலை திட்டத்தை சொல்லி, தீபாவதிக்கு அறிமுகமும் செய்து வைத்துள்ளார்..

கூலிப்படை

கூலிப்படை

இந்த கொலைக்காக, ஒரு லட்ச ரூபாய் ஸ்ரீ முகுந்தன் பணம் கேட்டுள்ளார்.. பேரம் பேசி கடைசியல் 60 ஆயிரம் ரூபாய்க்கு கொலை செய்ய முடிவாகி உள்ளது.. இதற்கு ஸ்ரீமுகுந்தனுக்கு அட்வான்ஸ் 10 ஆயிரம் ரூபாய் தந்துள்ளார் தீபாவதி. தீபாவதி தந்த பிளான்படி, குமார் சங்கரை அவரது வீட்டு அருகில் வைத்து ஸ்ரீ முகுந்தன் வெட்டி படுகொலை செய்துள்ளார்... இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, தீபாவதி, கோபு, ஸ்ரீ முகுந்தன், ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்...

அதிர்ச்சி

அதிர்ச்சி

கொலை செய்யப்பட்ட குமார்சங்கர் மதுபோதைக்கு ஆளானவர் என்று தெரிகிறது.. தினமும் குடித்துவிட்டு மனைவியையும் பிள்ளைகளையும் துன்புறுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.. எனினும், பெற்ற தந்தையை, அவரது மகளே ஆள் வைத்து கொன்ற சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

English summary
Kanniyakumari DMK Executive murder case and three arrested including his daughter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X