பிரபல ஓட்டலில்.. அதென்ன "வால் அறுந்து தொங்குதே".. கிச்சனில் குமட்டிடுச்சு.. தடுமாறிய கன்னியாகுமரி
கன்னியாகுமரி: கன்னியாகுமரியின் பிரபல ஓட்டலில் சாப்பிட போன அதிகாரிக்கு அதிர்ச்சி ஒன்று சாப்பாட்டில் காத்திருந்தது.. என்ன நடந்தது?
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பில், ஒரு பிரபலமான ஓட்டல் செயல்பட்டு வருகிறது.. இது சுற்றுவட்டாரத்திலேயே மிகவும் ஃபேமஸான ஓட்டலாகும். மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் இந்த ஓட்டல் அமைந்துள்தால், இங்கு தினமும் ஏராளமானோர் சாப்பிட வருவதுண்டு... அதனால் எப்போதுமே இந்த ஓட்டல் பிஸியாகவே காணப்படும்.

சாப்பாடு: இந்நிலையில், மார்த்தாண்டம் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் போலீஸ் ஆபீசர் ஒருவர், தன்னுடைய மகன் ரோகித்திடம், இரவு சாப்பாட்டுக்கு பீப் ஃப்ரை வாங்கி வருமாறு சொன்னார்.. அதன்படியே ரோகித்தும் அந்த ஓட்டலுக்கு சென்று மாட்டிறைச்சி ஃபிரை வாங்கி வந்துள்ளார்.
தொடர்ந்து வீட்டில் வைத்து பார்சலை பிரித்த போது, அதில் பல்லி கிடந்ததாம்.. அதுவும், வால் முறிந்த நிலையில் இறந்தபோய் பல்லி விழுந்து கிடந்ததை பார்த்ததுமே ரோகித்தும், அவரது அப்பாவும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷனுக்கு, பீப் ரைஸுடன் சென்றார்கள்.. இதுகுறித்து புகாரை தந்து, பல்லி கிடந்த இறைச்சியையும் காண்பித்தார்கள்.
கிச்சன்: அதனை பெற்றுக்கொண்ட போலீசார், உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஓட்டலுக்குள் நுழைந்தனர்.. அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த அத்தனை பேரையும் உடனடியாக வெளியேற்றினார்கள்.. ஓட்டலின் கிச்சனுக்குள் நுழைந்து, பரிசோதனை செய்தார்கள்.. ஆனால், அங்கிருந்த உணவில் சந்தேகம் இருந்ததால் இறைச்சியை பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.. இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே மார்த்தாண்டம் பகுதியிலுள்ள இன்னொரு ஓட்டலில், ஷவர்மா சாப்பிட்ட சிலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது... இப்படி கன்னியாகுமரியின் பிரபலமான ஓட்டல்களிலேயே தொடர்ந்து இதுமாதிரியான சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
கோரிக்கை: கன்னியாகுமரி சுற்றுலா பகுதியாகவும் விளங்குவதால், வெளிமாநிலம், வெளியூரை சேர்ந்தவர்களும் வந்து சாப்பிட நேரிடுகிறது.. அதனால், பாதுகாப்பு கருதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஓட்டல்களில் தீவிர சோதனை நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications