கன்னியாகுமரி கலக்குதே.. கண்ணாடி இழை பாலம் ரெடி.. திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா.. இதுதான் பிளான்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு அரசு சார்பில் மூன்று நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுமார் 37 கோடி ரூபாய் செலவில் விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையையும் இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் டிசம்பர் 30-ம் தேதி திறந்து வைக்கிறார்.

கன்னியாகுமரி கடல்நடுவே விவேகானந்தர் பாறை அருகே உள்ள இன்னொரு பாறையில், கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு, அதை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

kanniyakumari thiruvalluvar statue

பாலம் பணிகள்: கன்னியாகுமரியின் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக திகழும் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை பார்க்க படகில் செல்லும் சுற்றுலா பயணிகள் அடிக்கடி கடல் சீற்றம், கடல்நீர்மட்டம் தாழ்வு போன்றவற்றால் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலைமை உள்ளது. எனவே, விவேகானந்தர் பாறைக்கு செல்வோர் அனைவருமே திருவள்ளுவர் சிலைக்கும் சென்று வரும் வகையில் ரூ.37கோடி செலவில் கடல்சார் கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்க முடிவாகி, அதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதால், இதை சிறப்பிக்கும்விதமாக வருகிற 30 முதல் ஜனவரி 1ம் தேதி வரை 3 நாட்கள் தமிழக அரசின் சார்பில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. 30-ம் தேதி மாலை 5 மணிக்கு கன்னியாகுமரியில் இந்த வெள்ளி விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

கண்ணாடி இழை பாலம்: அப்போது, ரூ.37 கோடி செலவில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்.

முன்னதாக, திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளிவிழா ஆண்டு நிறைவையொட்டி சில வெள்ளி விழாப் பணிகள் அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் என டிசம்பர் 12-ம் தேதி முதல்வர் அறிவித்திருந்ததுடன். அதற்காக ரூ.10.89 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது.

திருவள்ளுவர் சிலை: மேலும், பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டிகள், கல்லூரி மாணவர்களிடையே சோஷியல் மீடியாவில் ஷார்ட்ஸ் - ரீல்ஸ் - ஏ.ஐ மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ள இடங்கள் வரைபடத்தில் குறிக்கப்பட்டு, அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளுவரின் திருவுருவச்சிலை அருகே சீரொளிக் காட்சி (3D Laser) ஏற்பாடு என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெள்ளி விழாவில், திருக்குறள் நெறிபரப்பும் 25 தகைமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்குகிறார். மாலை 7 மணிக்கு, சுகி.சிவம் தலைமையில் "திருக்குறளால் அதிக நன்மை தனிமனிதருக்கே - சமுதாயத்துக்கே" எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறுகிறது. மறுநாள் டிசம்பர் 31-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், அய்யன் திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

பரிசுகள்: திருவுருவச் சிலை வெள்ளிவிழாச் சிறப்பு மலரை வெளியிட்டு, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ - மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி விழாப் பேருரை நிகழ்த்துகிறார்.

தொடர்ந்து, பியானோ இசைக் கலைஞர் செல்வன் லிடியன் நாதஸ்வரத்தின் திருக்குறள் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 11.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை பல்வேறு கலைஞர்கள் பங்குபெறும் அரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். 1.1.2025 புதன்கிழமை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, திருக்குறள் ஓவியக் கண்காட்சியைத் திறந்துவைத்து நினைவுப் பரிசுகள் வழங்குகிறார்.

பந்தல் ஏற்பாடு: கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்துக்கான நிகழ்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.. இதற்காக பந்தல் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.. 10,000 பேருக்கு மேற்பட்டவர்கள் அமரும் வகையில் இருக்கைகள் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+