கன்னியாகுமரியே ஆடிப்போச்சு.. வக்கீல் கிட்ட பேசப்போன பெண்.. உடனே கர்ப்பம், அடுத்து அபார்ஷன்.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில், பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக செய்திகள் கசிந்து வரும்நிலையில், மீண்டும் ஒரு பாலியல் புகார் போலீசுக்கு சென்றுள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் கையில் எடுத்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே நெட்டாவை சேர்ந்த தம்பதி சுற்றுலா வேன், ஆம்புலன்ஸ் வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருகிறார்கள்.. இவர்களிடம் டிரைவர்களாக மிதுன், 26, மற்றும் சங்கீத், 28, ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர்.

kanniyakumari nagercoil lawyer

சில பிரச்னைகளால், இருவரும் வேலையில் இருந்து நின்று விட்ட நிலையில், அந்த தம்பதியின் செல்போன் நம்பருக்கு அவர்களின் அந்தரங்க வீடியோ வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் வெளிநாட்டு நம்பரிலிருந்து அழைப்பு வந்துள்ளது.. இந்த ஆபாச வீடியோவை அழிக்க வேண்டுமென்றால், 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று பேரம் பேசியிருக்கிறார்கள்.

புகார்கள்: அதற்கு பிறகுதான், இந்த வீடியோவை அனுப்பியது டிரைவர்கள் சங்கீத் மற்றும் மிதுன் என தெரியவந்ததை தொடர்ந்து, போலீசில் புகார் செய்தனர். டிரைவர்களை போலீசார் தேடி வரும் நிலையில், மறுநாளே மற்றொரு பாலியல் சம்பவமும், அது தொடர்பான புகாரும் கன்னியாகுமரி மக்களை அதிர வைத்து வருகிறது.

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. 36 வயதாகிறது.. இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஓய்வூதியம்: "நான் MBA பட்டப்படிப்பு முடித்துள்ளேன். என்னுடைய பெற்றோர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டனர்.. என்னுடைய அம்மாவின் ஓய்வூதியம் பணம் கிடைக்க வேண்டியிருக்கிறது. இதற்காக என்னுடைய தோழியின் அறிவுறுத்தலின் பேரில் கோர்ட்டில் வழக்கு தொடர்வதற்காக, நாகர்கோவிலை சேர்ந்த வக்கீல் ஒருவரை சந்தித்து பேசினேன்.

கடந்த 9-6-2023 அன்று என்னை செல்போனில் தொடர்பு கொண்ட வக்கீல், வழக்கு தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் எனக்கூறி அவரது அலுவலகத்துக்கு வரவழைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அதனை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து மிரட்டி வந்தார். இதற்கிடையே நான் கர்ப்பமானேன். பிறகு கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுத்து அந்த கருவையும் கலைத்துள்ளார்.

வக்கீல் எங்கே: இதுதொடர்பாக வக்கீலிடம் நான் கேட்டபோது, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.. என்னுடைய ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டினார். எனவே சம்பந்தப்பட்ட வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த புகார் மனு தொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவிட்டார். இதையடுத்து, விசாரணையும் துவங்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவது குமரியில் பரபரப்பை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+