ஹனிமூனு "அந்த" ரூமுலதான்.. மனைவியோடு வந்து நின்ற தம்பி.. அங்கே பார்த்தால் "அண்ணன்".. கொடுமைய பாருங்க

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது... இப்படியும் நடக்குமா? என்ற அதிர்ச்சியில் உள்ளனர் அந்த பகுதி மக்கள்.

அங்குள்ள ஒரு தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.. இதில், மூத்த மகனுக்கு கல்யாணமாகிவிட்டது.. ஒரு வயதில் குழந்தையும் உள்ளது... இவர்கள் சற்று வசதியானவர்கள்.. அதனால் பெரிய பங்களா வீட்டில் ஒன்றாகவே வசித்து வந்திருக்கிறார்கள்.. அனைவருக்குமே தனித்தனி அறைகள் இருப்பதாக தெரிகிறது.

சொகுசு அறை: இருந்தாலும், அந்த வீட்டிலேயே சொகுசு வசதி கொண்ட, விசாலமான ரூம் ஒன்று இருக்கிறதாம்.. இந்த ரூமில்தான், மூத்த மகன் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் தங்கி வருகிறார்கள்.

Kanniyakumari incident and why did elder brother do this work, what happened

ஆனால் அந்த ரூம் மீது 2வது மகனுக்கு எப்போதுமே ஒரு கண்ணு இருந்து வந்ததாம்.. இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், 3 நாட்களுக்கு முன்பு அவரை கல்யாணமும் செய்து கொண்டார்.. இப்போது அந்த புதுமனைவியை அழைத்துக் கொண்டு, வீட்டுக்கு வந்தார்.. நேராக அந்த சொகுசு ரூமுக்கு சென்று, அந்த ரூம் தனக்குதான் வேண்டும் என்று உரிமை கோரினார்... ஆனால் அண்ணன் ரூமை தர விரும்பவில்லை..

தம்பி - அண்ணன்: இதனால் அன்று முதல், அந்த ரூமை யார் முதலில் பிடிப்பது யார்? என்ற போட்டி அண்ணன்-தம்பிக்குள் ஆரம்பமானது... ஒருவேளை அண்ணன் முதலில் அறையை பிடித்து விட்டால், அன்று அவர் அங்கேயே தூங்கி விடுவார்.. தம்பி ரூமுக்கு வந்தாலும், வந்தாலும் அங்கிருந்து நகருவது கிடையாதாம்.. இப்படியே 3 நாட்கள் ஓடியிருக்கிறது.. பிரச்சனையும் முடிவுக்கு வரவில்லை..

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம், புதுமாப்பிள்ளை சாப்பிட்டு முடித்தார்.. இரவு நேரம் என்பதால்தான், முன்கூட்டியே அண்ணன் ரூமுக்கு போய்விடுகிறார் என்பதால், மதிய சாப்பாடு முடிந்ததுமே, அந்த ரூமுக்குள் நுழைந்து விட்டார் தம்பி.. சிறிது நேரம் கழித்து, அண்ணன் திரும்பிவந்ததுமே, ரூமில் தம்பி தங்கியிருப்பதை பார்த்து கோபப்பட்டுள்ளார்..

Kanniyakumari incident and why did elder brother do this work, what happened

ஆத்திரம்: "நான் தான் இந்த ரூமில் முதலிலிருந்தே குடும்பத்துடன் தங்கியிருக்கிறேன்.. இந்த ரூம்தான் எங்களுக்கு பழகிவிட்டது, அதனால், நீ வேறு ரூமுக்கு போ" என்றார்..

உடனே தம்பி, "இந்த ரூம் பொதுவானது... இத்தனை நாளும் நீ இங்கேதானே தங்கியிருந்தாய்? இப்போது எனக்கு புதுசா கல்யாணம் ஆகியிருக்கிறது.. அதனால்தான், இந்த ரூமில்தான், தேனிலவு கொண்டாடுவேன்" என்று அடம் பிடித்திருக்கிறார்.. இப்படியே அண்ணன் - தம்பிக்கு நடுவே வாய்தகராறு முற்றியது..

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அண்ணன், பெட்ரோல் எடுத்து வந்து, அந்த ரூம் முழுக்க ஊற்றி, தீ வைத்து கொளுத்திவிட்டார்.. இதனால், தீ மளமளவென பரவி, அங்கிருந்த கட்டில், மேஜை, டிரஸ்ஸிங் டேபிள் என அனைத்திலும் பற்றி எரிந்தது.. அந்த ரூமிற்குள் எல்லாமே விலை உயர்ந்த பொருட்கள் என்பதால், தீயில் அவைகளும் சேர்ந்தே எரிந்தன.. இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் விரைந்தது வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

அதிசயம்: இதுகுறித்து என்றாலும், பொருட்கள் கருகிவிட்டன.. இதுகுறித்து போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். அந்த வீட்டில் அத்தனை ரூம்கள் இருந்தாலும், இந்த ஒரே ஒரு சொகுசு ரூமுக்காக அண்ணனும் - தம்பியும் அடித்துகொண்ட அல்பத்தனம், இந்தியாவிலேயே எங்கியும் நடந்திருக்காது போல..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+