அவசர அவசரமாக கிச்சனுக்கு ஓடிய கணவர்.. நர்ஸ் ஜாஸ்மினுக்கு போன் வந்ததுமே.. கன்னியாகுமரியில் இப்படியுமா
கன்னியாகுமரி: வடமாநிலங்களை போலவே தமிழகத்திலும் கள்ளக்காதல் அட்டூழியங்கள் அதிகரித்து வருவதுடன், குடும்ப உறவுகளும் சிதைந்து வருகின்றன. கணவனை மனைவி கொல்வதும், மனைவியை கணவன் கொல்வதும் என அட்டகாசங்கள் அதிகரித்துவிட்டன.. இதனால் இவர்களையே நம்பியிருக்கும் குழந்தைகள் தங்களது எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் துயரமும் நடந்து வருகிறது.. அதேபோல, குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்களும் கூறுகின்றன.. இதோ கன்னியாகுமரியிலும் ஒரு கொலை முயற்சி நடந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மேவளூர்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் - பவானி இவர்கள் பேரம்பாக்கம் தண்டலம் சாலையில் பிரியாணி கடை நடத்தி வந்திருக்கிறார்கள்.. இந்த கடையில் மாஸ்டராக வேலை பார்க்கும் திருவாரூரை சேர்ந்த 36 வயது மதன்ராஜ் என்பவருடன், 38 வயது பவானிக்கு கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது..

மட்டன், காய்கறி
காய்கறி, மட்டன் வாங்குவதற்காக ஹரி கிருஷ்ணன் கடைகளுக்கு தினமும் சென்று வரவேண்டியிருக்கும்,. அந்த நேரத்தில் கடையை கவனித்து கொள்வாராம் பவானி..
நாளுக்கு நாள் பவானியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் வந்ததால், கடைக்குள்ளேயே சிசிடிவி கேமராவை ரகசியமாக பொருத்தி கண்காணித்துள்ளார். அப்போதுதான், கடையில் பவானியும், மாஸ்டர் மதன்ராஜூம் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது.
பிரியாணி மாஸ்டர்
இதையடுத்து, இனிமேல் கடைக்கு வரவேண்டாம் என்று மாஸ்டரிடம் சொல்லி நிறுத்திவிட்ட ஹரிகிருஷ்ணன், மனைவியையும் கண்டித்திருக்கிறார்.. இதனால் கள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் தவித்த பவானி, கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முடிவுசெய்தார்..
இதுகுறித்து ஹரிகிருஷ்ணனிடம் பேசி கணவரை கொல்ல நாளையும் குறித்தார்.. சம்பவத்தன்று பைக்கில் வந்த ஹரி கிருஷ்ணனை, கூலிப்படையினர் காரை ஏற்றி கொல்ல முயன்றனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக ஹரிகிருஷ்ணன் உயிர் தப்பிவிட்டார்.
உயிரோடு விட்டுவிடுகிறோம்
பிறகு அந்த கூலிப்படையினர் ஹரிகிருஷ்ணனுக்கு போன்செய்து, "உன்னை கொல்வதற்கு உன் மனைவி ரூ.15 லட்சம் பேரம் பேசி ரூ.2 லட்சம் தந்திருக்கிறார்.. நீ எங்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்தால் உன்னை உயிரோடு விட்டு விடுகிறோம்" என்று கூறியிருக்கிறார்கள்.
இதைக்கேட்டு அரண்டுபோன ஹரிகிருஷ்ணன் உடனே ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு ஓடினார்.. தனக்கு நடந்த கொலை முயற்சி குறித்தும் புகார் தந்தார்.. இதையடுத்து, கள்ளக்காதல் ஜோடியை பிடித்து போலீஸ் விசாரணை செய்தது..
கள்ளக்காதல் ஜோடி
அப்போது, கூலிப்படையை ஏவி ஹரிகிருஷ்ணனை கொலை செய்ய முயன்றதை கள்ளக்காதல் ஜோடி ஒப்புக்கொண்டனர். பிறகு, கூலிப்படையை சேர்ந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ், விஜய், மணிகண்டன் உட்பட கள்ளக்காதல் ஜோடி என மொத்தம் ஐவரையும் கைது செய்து, ஜெயிலில் உள்ளே வைத்திருக்கிறது.. இந்த சம்பவம் குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு வந்தாலும், பெரும் அதிர்ச்சியை காஞ்சிபுரத்தில் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகாத நிலையில், கன்னியாகுமரியிலும் ஒரு கொடூர கொலை முயற்சி நடந்துள்ளது.. தோவாளை அருகே உள்ள வீரமார்த்தண்டன் புதூரை சேர்ந்தவர் சுரேஷ்.. 41 வயதான சுரேஷ், நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல டூவீலர் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மனைவி பெயர் அனுஷா ஜாஸ்மின்.. 33 வயதாகிறது.. நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் நர்ஸாக உள்ளார்.. 2 பேருமே காதலித்து கல்யாணம் \செய்து கொண்டவர்கள்.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
தம்பதிக்குள் மனஸ்தாபம்
ஆனால் சமீபகாலமாகவே சுரேஷூக்கு ஜாஸ்மினின் நடத்தையில் சந்தேகம் எழுந்தது.. இதனால் தம்பதிக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.. இதனால் ஒருகட்டத்தில் வெறுப்படைந்த ஜாஸ்மின், கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.. 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு தம்மத்துகோணம் பகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.
இதனிடையே கடந்த வாரம் ஜாஸ்மினை தேடி வந்த சுரேஷ், சமாதானம் பேசினார்.. மறுபடியும் வீட்டுக்கு வரவேண்டும், இனிமேல் எதற்காகவும் தகராறு செய்ய மாட்டேன், நாம் மீண்டும் சந்தோஷமாக வாழலாம், வீட்டுக்கு வந்து சாப்பாடு மட்டும் சமைத்து போட்டால் போதும் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்..
போனில் யாரு
இதைக்கேட்ட ஜாஸ்மின் மனம் இறங்கினார்.. தன்னுடைய கணவர் திருந்திவிட்டார் என்று முழுமையாக நம்பினார்.. இதனால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, மீண்டும் சுரேஷூடன் கிளம்பி சென்றார்..
இந்நிலையில், நேற்று முன்தினம் சுரேஷ், ஜாஸ்மினுக்கு போன் செய்துள்ளார்.. அப்போது ஜாஸ்மின் போன் பிஸியாக இருந்ததாக தெரிகிறது. உடனே வீட்டுக்கு வந்த சுரேஷ், யாரிடம் போனில் பேசினாய்? என்று ஜாஸ்மினிடம் கேட்டு தகராறில் இறங்கினார்..
இதனால் மறுபடியும் தம்பதிக்குள் வாக்குவாதம் முற்றியது.. அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ், வெளியே போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, திடீரென கிச்சனுக்குள் சென்று காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து ஜாஸ்மினின் கழுத்தை அறுத்துவிட்டார்.. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விழுந்து ஜாஸ்மின் அலறினார்..
ஆனால், சுரேஷ் அங்கிருந்து எகிறி குதித்து தப்பி ஓடிவிட்டார்.. அனுஷாவின் அலறலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிறகு போலீசாரிடம் ஜாஸ்மின் தந்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications