Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டேஞ்சரான" பாதிரியார்.. நெருங்கி பழகிய பெனடிக்.. கல்யாண பேச்சை எடுத்தாலே "ஜூட்" தானாம்.. பரபர குமரி

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: பாதிரியார் மீது இன்னொரு புகார் கிளம்பி உள்ளது.. மற்றொரு இளம்பெண் போலீசுக்கு போயுள்ளார்.. நாளுக்கு நாள் பாதிரியார் மீது குவியும் புகார்களை கேள்விப்பட்டு, குமரி போலீசார் மலைத்து போய் உள்ளனராம்..!!

குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ... 29 வயதாகிறது.. நன்றாக படித்தவர்.. சென்னையில் தத்துவயியல், எம்பிஏ., எம்ஏ ஆங்கிலம் படித்திருக்கிறார்

இதைதவிர, இறையியல் தொடர்பான படிப்புகளை கிட்டத்தட்ட 7 வருடங்கள் படித்துள்ளார்.. ஆங்கிலம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்.

Kanniyakumari Pastor and Crime branch police inquiry over another case against Priest benedict andro

ஆபாசமான சேட்டிங்: பாதிரியாராக பணியாற்றுவதற்கு முன்பிருந்தே, பெண்களிடம் நெருங்கி பழகி வந்திருக்கிறார். அந்தவகையில், சென்னையில் படிக்கும்போது ஒரு பெண்ணை 4 வருடங்களாக காதலித்துள்ளார்... அதே பெண்ணுக்கு கல்யாணமும் செய்து வைத்துள்ளார்... ஆனால், கல்யாணத்துக்கு பின்னரும் அந்த பெண்ணுடன் பெனடிக்ட் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார்... இவர்கள் இருவரும் அரை நிர்வாணத்தில் பேசிக்கொண்ட வீடியோ கால் ஸ்கிரீன் ஷாட்டுகள் முதன்முதலில் இணையத்தில் வெளியாகியபோதுதான், பெனடிக்கின் லீலைகள் ஒவ்வொன்றாக வெளியே தெரிய ஆரம்பித்தது..

குட் மார்னிங், குட்நைட்: கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள், அவர்கள் வீட்டு பெண்கள் என 80க்கும் மேற்பட்ட பெண்களுடன் நெருங்கி பழகியதாகவும் கூறப்படுகிறது. எப்போதுமே சர்ச்சுக்கு வரும் இளம் பெண்களிடம், அறிமுகம் செய்து கொண்டு, அவர்களுடைய வாட்சப் நம்பர் கேட்டு வாங்கி கொள்வாராம்.. அதற்கு பிறகு, குட் மார்னிங், குட் நைட் மெசேஜ்களை அனுப்ப தொடங்குவாராம்.. அதற்கு யாரிடமிருந்தாவது ரிப்ளை வந்துவிட்டால், உடனே அவர்களிடம் அடுத்தகட்ட பேச்சை ஆரம்பித்து, விஷயத்துக்கு வருவாராம்.. 'நான் சர்ச்சில் மட்டும்தான் பாதிரியார்.. மற்றபடி எல்லாரையும் போல நான் சராசரி மனிதன்" என்று சொல்லி, அந்த பெண்களிடம் உள்ள தயக்கத்தை உடைத்துவிடுவாராம்.

பாதிரியார் கைது: பாதிரியார் கைது செய்யப்பட்டபோது, 9 மணி நேரம் விசாரணை அவரிடம் நடத்தப்பட்டது.. அப்போது உண்மையை சொல்ல மறுத்த பாதிரியார், "பெண்கள் யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களே விருப்பப்பட்டுத்தான் அப்படி என்னிடம் நடந்து கொண்டார்கள்" என்றார்.. ஆனால், இதற்கு பிறகு ஒருவாரம் கழித்து, ஒருநாள் விசாரணை அவரிடம் நடத்தப்பட்டது.. அப்போது, லேப்டாப்பில் இருந்த பெண் யார்? அவருடனான தொடர்பு குறித்து போலீசார் கேட்டுள்ளனர்.. அதற்கு பாதிரியார், அந்த பெண்ணை தீவிரமாக தான் காதலித்து வந்ததாகவும், ஆனால், பாதிரியார் என்பதால் அந்த பெண்ணை தன்னால் கல்யாணம் செய்து கொள்ள முடியவில்லை, எனவே 2 பேருமே விருப்பப்பட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் பதிலளித்திருக்கிறார்..

Kanniyakumari Pastor and Crime branch police inquiry over another case against Priest benedict andro

கல்யாணம்: மற்ற பெண்களின் போட்டோக்களை காட்டி, அவர்களை பற்றி போலீசார் கேட்டுள்ளனர்.. அதற்கு பாதிரியார், அந்த ஒரு பெண்ணை மட்டும்தான் காதலித்ததாகவும், மற்றவர்களுடன் நட்பாக மட்டுமே பழகி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.. இதற்கு பிறகு, போலீசார் பாதிரியாரை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.. அங்கு தடயங்கள் உள்ளதா? என்பது குறித்து சோதனை செய்தனர். சர்ச்சுக்கும் அழைத்து சென்று, அங்கு விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில்தான், குமரி மாவட்டத்தை சேர்ந்த இன்னொரு பெண்ணும், பாதிரியார் மீது புகார் தந்தார்..

அந்த புகாரில், "கடந்த 2022-ம் ஆண்டு பாதிரியாருடன், நான் செல்போன் வாட்ஸ்-அப் மூலம் சாட்டிங் செய்தேன். ஆனால், அவரது நடவடிக்கைகள் பிடிக்கவில்லை.. அதனால், நான் ஒதுங்கிக் கொண்டேன். ஆனாலும் அவர் எனக்கு விடாமல் தொல்லை கொடுத்து வந்தார்" என்று கூறியிருந்தார். இந்நிலையில், 2வது வழக்கு தொடர்பாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிடம் விசாரணை நடத்த போலீசார் அனுமதி கேட்டு நாகர்கோவில் ஜேஎம்2 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து நேற்று பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இருந்து நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு பென்டிக்ட் ஆன்றோ அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலுக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதனையடுத்து அவரை சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.. அப்போது, குலசேகரம் மாணவியின் புகார் குறித்து கேட்டனர். அப்போது பாதிரியார், "யாரையும் நான் மிரட்டவில்லை. நட்பின் அடிப்படையில் சாட்டிங் செய்தேன். சிலர் என்னிடம் சாட்டிங் செய்வதை நிறுத்துமாறு சொன்னார்கள்.. அவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்ததில்லை.. நான் இருந்த சர்ச்சில் பிரார்த்தனைக்காக அந்த பெண் வந்தார்.. அப்போது எங்கள் 2 பேருக்கும் இடையில பழக்கம் ஏற்பட்டது உண்மைதான்..

Kanniyakumari Pastor and Crime branch police inquiry over another case against Priest benedict andro

வாக்குமூலம்: வாட்ஸ் அப், மெசஞ்சர், போன் கால் என்று நாங்கள் பேசி வந்தோம்.. திடீர்னு அந்த பெண், என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப்படுத்தியதால், அவரை விட்டு விலகிட்டேன். இந்த மாதிரி நிறைய பெண்களுடன் எனக்கு பழக்கம்தான். ஆனால் கல்யாணத்துக்கு வற்புறுத்தினதால், அவர்களை விட்டு விலகிட்டேன்" என்றார் பாதிரியார். கடந்த முறை விசாரணையின்போது, ஒரேஒரு பெண்ணிடம் மட்டும் நெருங்கி பழகினேன், மற்ற பெண்களிடம் நட்பு ரீதியாக மட்டுமே பழகினேன் என்று வாக்குமூலம் தந்த நிலையில், இப்போது, அடுத்தடுத்த விவகாரங்கள் வெளிவந்தபடி உள்ளன.

ஏற்கனவே நர்சிங் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு இருந்த வழக்கிற்கு, குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வழக்கில், சாட்சியங்களை போலீசார் திரட்டி வருகிறார்கள். நர்சிங் மாணவியிடமும் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். சில பதிவுகளும் ஆதாரமாக வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.. விரைவில் இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+