"லீலை".. லேப்டாப்ல அந்த பெண்ணை பார்த்ததுமே, குமரி பாதிரியார் சொன்ன காரணம்.. நோ தயக்கம் + நோ டென்ஷன்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் கைதான பாதிரியார் பெனடிக்கிடம், சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.. இந்த விசாரணையின்போது, ஆன்றோ பல்வேறு தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக் ஆண்டோ... 29 வயதாகிறது. நன்றாக படித்தவர்..
சென்னையில் தத்துவயியல், எம்பிஏ., எம்ஏ ஆங்கிலம் படித்திருக்கிறார். இதைதவிர, இறையியல் தொடர்பான படிப்புகளை கிட்டத்தட்ட 7 வருடங்கள் படித்துள்ளார்.. ஆங்கிலம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர்.

 ஹெட்ஆபீஸ்

ஹெட்ஆபீஸ்

குழித்துறையை தலைமையிடமாகக்கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக உள்ளார்... பேச்சிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பாதிரியாராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.. ஒரு வருடத்துக்கு முன்பு, தக்கலை அருகே உள்ள பிலாங்காலை என்ற பகுதியில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக பொறுப்புக்கு வந்திருக்கிறார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், இவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் பரவின.. சர்ச்சுக்கு வரும் பெண்களுக்கு, டபுள் மீனிங்கில் மெசேஜ்களை அனுப்பி, ஆபாசமாக அவர்களுடன் பேசி வந்துள்ளது அம்பலமானது.

 அந்தரங்க உறுப்புகள்

அந்தரங்க உறுப்புகள்

அந்த மெசேஜ்களின் ஸ்கிரீன் சாட்களும், அவரது ஆபாச வீடியோ காலிங் ஸ்கிரீன் சாட்களும் சோஷியல் மீடியாவில் பரவின.. பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர், பாதிரியார் தன்னை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததாகவும் உடலில் மோசமாக தொட்டதாகவும், பிறகு, வாட்ஸ் அப் மூலம் ஆசையை தூண்டும் விதமாக மெசேஜ் அனுப்பியதுடன், அவரது அந்தரங்க உறுப்புக்களை போட்டோ எடுத்து அந்த போட்டோக்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியதாகவும் சைபர்கிரைம் போலீசில் புகார் தந்திருந்தார்..

 சைபர் கிரைம்

சைபர் கிரைம்

மேலும், பேச்சிப்பாறையில் இருந்து பிலாங்காலை சர்ச்சுக்கு மாற்றல் ஆகி சென்ற பிறகும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பும்படி தன்னை கட்டாயப்படுத்தியதாகவும், அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.. இந்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார், பாலியல் உணர்வை தூண்டுவது, பெண் வன்கொடுமை, சமூக வலைத்தளங்களில் ஆபாச போட்டோக்கள் அனுப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.. வருகிற 4-ந் தேதி வரை ஜெயிலில் அடைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..

பாதிரியார்

பாதிரியார்

ஆனால், பாதுகாப்பு கருதி அவரை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்துள்ளனர்.. பாதிரியாரிடமிருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் செல்போன் ஆதாரங்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். இது தொடர்பாக கோர்ட்டில் மனு தாக்கலும் செய்யப்பட்டது.. பின்னர், பாதிரியாருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது...

 ஆபாச சேட்டிங்

ஆபாச சேட்டிங்

இதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவலில் எடுத்து இன்று நாள் முழுவதும் விசாரணை நடத்தினர்.. அப்போது, லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்த போட்டோக்கள், வீடியோக்கள் தொடர்பான விவரங்கள் அவரிடம் கேட்கப்பட்டது. மேலும் ஆபாச சாட்டிங் குறித்த விவரங்களையும், அவர் யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பது குறித்த விவரங்களையும் கேட்டனர்.. அதற்கு ஆன்றோ, எந்த ஒரு தயக்கமுமின்றி, போலீசாரின் கேள்விகளுக்கல்லாம் கேஷூவலாக பதில் சொன்னாராம்..

 கேஷூவல் ரிப்ளை

கேஷூவல் ரிப்ளை

அதேபோல, லேப்டாப்பில் இருந்த பெண் யார்? அவருடனான தொடர்பு குறித்து போலீசார் கேட்டுள்ளனர்.. அதற்கு பாதிரியார், அந்த பெண்ணை தீவிரமாக தான் காதலித்து வந்ததாகவும், ஆனால், பாதிரியார் என்பதால் அந்த பெண்ணை தன்னால் கல்யாணம் செய்து கொள்ள முடியவில்லை என்றும், எனினும், 2 பேருமே விருப்பப்பட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் பதிலளித்தார்.. தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், பல்வேறு தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.. ஒருநாள் விசாரணை முடிந்து, இன்று மாலை அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+