மருமகளையும் விடல.. கலக்கத்தில் 3 பெண்கள்.. குமரி பாதிரியார் 2 விஷயத்தை சொன்னதுமே.. அதிர்ந்த போலீஸ்
கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக்கிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
குமரி: குமரி பாதிரியார் கைதாகி உள்ள நிலையில் அவரிடம் விசாரணை தொடர்கிறது.. அந்தவகையில் 2 வகையான கோரிக்கையை போலீசாரிடம் பாதிரியார் பெனடிக் விடுத்துள்ளார்.. என்ன அவைகள்?
பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக பாதிரியார் பெனடிக் தொல்லை கொடுக்கும் வகையில் நடந்து கொண்டுள்ள நிலையில், முதல்முறையாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்த மாணவி கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த 11-ம் தேதி புகார் தந்துள்ளார்.. அந்த பாலியல் புகாரின் அடிப்படையில்தான், நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் 14ம் தேதி பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

ஆபாச சேட்டிங்
இதற்கு நடுவில், பாதிரியார் மற்ற பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள், வாட்ஸ்அப் மெசேஜ்கள், ஸ்கிரீன்ஷாட்கள் என பலவும் வேக வேகமாக சோஷியல் மீடியாவில் பரவியது.. அப்போதுதான், பாதிரியாரால் பாதிக்கப்பட்டது ஒரு பெண் மட்டும் கிடையாது, ஏகப்பட்ட இளம் பெண்கள் சிக்கி உள்ளனர் என்பது தெரியவந்தது.. இணையத்தில் ஆபாச வீடியோக்கள் வெளியானதுமே, பாதிரியார் தலைமறைவாகிவிட்டார்.. எனவே, பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்ய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

பால் பண்ணை
பெங்களூருவில் பதுங்கியிருக்கிறார் என்றார்கள், பிறகு கேரளாவில் தலைமறைவாக இருக்கிறார் என்றார்கள்.. அந்தந்த மாநிலங்களுக்கு தனிப்படையினர் தேடி சென்றனர்.. ஆனால், நாகர்கோவில் பண்ணைவீட்டிலேயே தலைமறைவாக இருந்திருக்கிறார் பெனடிக்.. அதாவது, நாகர்கோவிலில் அன்றைய தினம் காலையிலேயே பாதிரியாரின் செல்போன் தொடர்பில் இருந்துள்ளது.. அதனால்தான், நாகர்கோவிலில் தீவிரத்தை அதிகப்படுத்தினர்.. அதற்கேற்றவாறு, பால் பண்ணை பகுதியில் காரில் பாதிரியல் சென்றபோது, அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

11 சிம்கார்டு
தலைமறைவாக இருந்தபோது, பாதிரியார் மொத்தம் 11 சிம்கார்டுகளை வைத்திருந்துள்ளார்.. இந்த சிம் கார்டுகளை பயன்படுத்திதான், அவர் ஒவ்வொரு இடமாக மாறி தலைமறைவாக இருந்ததும் தெரிய வந்துள்ளது... இந்த 11 சிம்கார்டுகளில் 6 சிம் கார்டுகள் கர்நாடக மாநிலத்தில் உள்ளவை.. மற்ற 3 சிம்கார்டுகள் கேரளாவிலும், 2 சிம் கார்டுகள் தமிழ்நாட்டிலும் உள்ளவை ஆகும்.. இந்த 11 சிம்கார்டுகளை மோப்பம் பிடித்தபோதுதான், அன்றைய தினம் நாகர்கோவிலில் இருந்தது தெரியவந்துள்ளது..

நோ கல்யாணம்
கைதானவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. காதல், திருமணம், என்ற சராசரி வாழ்க்கைக்கு தான் ஆசைப்பட்டது முதல் பாதிரியார் ஆனது வரை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.. 12-ம் கிளாஸ் படித்துவிட்டு, இறையியயல் கல்வி, தத்துவவியல் படித்துள்ளார் ஆன்ட்ரோ.. சென்னையில் அதற்கான டிரெயினிங் எடுத்தபோதுதான், ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது.. அந்த பெண்ணை ஆண்ட்ரோ காதலித்துள்ளார். இருவருமே உயிருக்குயிராக விரும்பி உள்ளனர்.. நெருக்கமாகவும் இருந்துள்ளனர்.. ஆனால், கத்தோலிக்க பாதிரியார்கள், கல்யாணமே செய்துகொள்ளாமல் சேவை ஆற்ற வேண்டும் என்பது மரபு...

நெருக்கம் + இணக்கம்
எனவே, தான் படித்த இறையியல் தத்துவத்துக்கு எதிராக நடந்து கொள்வது பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு நெருடலை ஏற்படுத்தியதாம்.. இதனால் பாதிரியார் பொறுப்பில் இருந்து வெளியேறி, மனசார விரும்பிய காதலியை கல்யாணம் செய்து, குடும்ப வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டாராம்.. ஆனால், இவர், ஒரு பாதிரியாராக வேண்டும் என்பது சிறு வயதிலேயே அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருக்கிறார்கள்.. பெனடிக்கின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்துள்ளது.. கடுமையாக எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்கள்.. பாதிரியாராக தொடர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்களாம்..

லேப்டாப்
அதனால்தான் பாதிரியாக தொடர்ந்ததாகவும், ஆனாலும், தன்னுடைய காதல் நிறைவேறாத பிறகும், அந்த பெண்ணுடன் தொடர்ந்து பழகியதாகவும் கூறுகிறார்.. 2 பேருமே வீடியோ காலில் அடிக்கடி பேசும்போதுதான், அந்த அந்தரங்க காட்சிகளை வீடியோவில் பதிவு செய்துகொள்வாராம்.. அப்படி எடுத்த அந்தரங்க வீடியோக்களை தன்னுடைய லேப்டாப்பிலும் பத்திரமாக சேமித்து வைத்து கொள்வாராம்.. அதேபோல, தனக்கு அறிமுகமான அனைத்து இளம்பெண்களுடன் செல்பி எடுத்து, போட்டோக்களை லேப்- டாப்பில் வைத்துள்ளார்... காரணம், இளம் பெண்களுடன் வாட்ஸ் அப் சாட்டிங் செய்வது இவரது பொழுதுபோக்காம்.. இவ்வளவையும் போலீசாரிடம் சொல்லி உள்ளார்..

கலக்கம் பீதி
அப்படி பத்திரப்படுத்தி வைத்த வீடியோக்கள்தான், அவருக்கு எதிரான சாட்சிகளாக இன்று உருமாறி நிற்கின்றன.. ஏற்கனவே பெனடிக் தந்த புகாரின்பேரில் ஒருவர் கைதாகியிருக்க, இன்னொருவர் தலைமறைவாக இருக்கிறார்.. அவரிடம்தான் பாதிரியாரின் செல்போன் இருப்பது தெரியவந்துள்ளது.. அவரை கைது செய்தால்தான், பாதிரியார் செல்போனில் உள்ள மற்ற விவரங்கள் முழுமையாக தெரியவரும் என்கிறார்கள் போலீசார். பாதிரியாரிடம் விசாரணை தொடருகிறது.. அதேசமயம், பாதிரியாரிடம் தொடர்பில் இருந்த சம்பந்தப்பட்ட பெண்களும் பீதியில் உள்ளார்களாம்.. அந்தவகையில், ஒரே குடும்பத்தில் 3 பெண்கள் போலீஸ் விசாரணைக்கு பயந்து போய் கிடக்கிறார்கள்..

டாக்குமெண்ட்கள்
ஒரு கான்ட்ராக்டரின் மனைவி, மகள், மருமகள் என்று 3 பேரிடமும் ஒரே நேரத்தில் பழகி ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பாதிரியார் வாட்ஸ் ஆப் மூலம் சாட்டிங் செய்து வந்துள்ளார்... இவர்கள் உட்பட பாதிரியாரிடம் தொடர்பில் இருந்த பெண்கள் எல்லாருமே இப்போது அதிர்ச்சியில் உள்ளனர்... பாதிரியாரிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் தங்களிடம் விசாரணை நடத்த போலீஸ் வந்து விடுமோ என்று கலங்கி போய் கிடக்கிறார்கள்.. அதேசமயம், பாதிரியாருக்கு எதிராக புகார்கள் பதிவாகி வருகின்றன.. பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் செய்யலாம் என்றும், அவர்களது விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்..

தனி ரூம்
இதுவரை 4 பெண்கள் பாதிரியார் மீது புகார் செய்துள்ள நிலையில், இந்த புகார் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று நம்பப்படுகிறது.. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை விரைவாக 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யப்படும் என்றும், ஆபாச படங்களை வெளியிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்பி ஹரிகிரண்பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்போதைக்கு நாகர்கோவில் ஜெயிலில், பாதிரியார் தனி ரூமில் அடைக்கப்பட்டுள்ளார்..

உருக்கம்
ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் பாதிரியாரே கோரிக்கை வைத்துள்ளார்.. எனவே, வேறு சிறைக்கு அவரை மாற்றுவது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்... அதேபோல, இன்னொரு வேண்டுகோளையும் பாதிரியார் போலீசாரிடம் வைத்திருக்கிறார்... இணையத்தில் பரவிவரும் தன்னுடைய வீடியோக்கள், போட்டோக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கையும் வைக்க, இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தந்துள்ளார்களாம்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications