கன்னியாகுமரி பீச்சில் யாரிது? உடம்பெல்லாம் மூடிய சிப்பிகள், சங்குகள்.. கொஞ்சம்கூட அடையாளமே தெரியலயே
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் நடந்துள்ள சம்பவம், மிகப்பெரிய அதிர்ச்சியை அங்கு ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பாக குளச்சல் போலீசாரும் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.. எனினும், குமரி பகுதியில் இதுதொடர்பான அதிர்வலைகள் அடங்கவில்லை.
சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருப்பது கன்னியாகுமரி.. இங்குள்ள சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து கொண்டேயிருக்கிறார்கள்..

குறிப்பாக. வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதிலும், கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் முழுநிலவின் ஒளியில் கடல் அழகை ரசிக்க இரவு நேரங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவது வாடிக்கையாகும். இதனால், பொதுமக்களின் பாதுகாப்புக்காக எந்நேரமும் போலீஸ் பாதுகாப்பு கடற்கரையில் போடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில், கன்னியாகுமரி கடலில் இளைஞர் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது.. முதலில் யாரோ ஒரு இளைஞர் நள்ளிரவில் கடலில் குளித்து கொண்டிருப்பதாக அங்கிருந்தவர்கள் நினைத்துள்ளனர். பிறகுதான், சடலம் மிதந்து வருவதை கண்டு அலறியுள்ளனர்..உடனடியாக போலீசுக்கும் தகவல் சென்றுள்ளது.
இளைஞர் காயம்: விரைந்து வந்த போலீசார், இளைஞரின் சடலத்தை மீட்டனர்.. அவரது உடம்பெல்லாம் காயங்கள் கிடந்தன.. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்து, அந்த இளைஞர் யார் என்ற விசாரணையில் போலீசார் இறங்கினர்.
இந்நிலையில், மண்டைக்காடு அருகே கூட்டுமங்கலம் கடற்கரை பகுதியில் எலும்புக்கூடு இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. நேற்றைய தினம், கூட்டுமங்கலம் பகுதியை சேர்ந்த சிலர் கடற்கரைக்கு பகுதிக்கு சென்றனர். அப்போது எலும்பு கூடாக ஒரு மனித சடலம் கிடப்பதை பார்த்து, குளச்சல் கடலோர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணை: உடனே சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிறகு கரை ஒதுங்கிய மனித சடலத்தை கைப்பற்றி விசாரணையை துவங்கினார்கள்..
ஆனால், அந்த சடலம் ஆணா? பெண்ணா? என்றே தெரியவில்லையாம்.. அடையாளம் காண முடியாத அளவுக்கு அந்த எலும்புக்காட்சி உருக்குலைந்து கிடந்ததாம்.. மேலும், சடலத்தின்மீது சங்கு, சிப்பிகள் அழுத்தமாக படித்திருந்தது.. அதனால், எலும்புக்கூடாக மீட்கப்பட்டவர் எப்படியும் 2 மாதங்களுக்கு முன்பே கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்..
போஸ்ட் மார்ட்டம்: இதனை தொடர்ந்து போலீசார் அந்த சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்ம் செய்வதற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து மண்டைக்காடு கிராம நிர்வாக அலுவலர் தீபக் கடலோர போலீசில் புகார் செய்ததன் பேரில், போலீசாரும் வழக்குப்பதிந்து பிணமாக கரை ஒதுங்கியவர் யார்? எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.. கடற்கரையில் எலும்பு கூடாக மனித சடலம் கரைஒதுங்கிய சம்பவம், கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications