கன்னியாகுமரியில் ஓடும் பஸ்ஸில் "பூத்த" கள்ளக்காதல்.. பக்கத்திலிருந்த மனைவியை காணோமாம்.. அதுக்குள்ள?

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம் மனைவி செய்த காரியம், மிகப்பெரிய அதிர்ச்சியை போலீசாருக்கு ஏற்படுத்தி வருகிறது.. யாரிந்த பெண்? மதுரைக்கு சென்ற கணவனுக்கு என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளது மஞ்சாடி என்ற பகுதி.. இங்கு வசித்து வரும் நபர் ஒருவர், அந்த பகுதியில் வசித்து வந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண், மதுரையை சேர்ந்தவர்.. 20 வயதாகிறது.

Kanniyakumari wife Madurai Train

திருமணம்: கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, இவர்கள் 2 பேருமே திருமணம் செய்து கொண்டார்கள்.. இப்போது இந்த தம்பதிக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது. ஆனால், கணவர் மதுபோதைக்கு அடிமையானவராம்.. இதனால், குடித்துவிட்டு, அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்திருக்கிறார்.

நாளுக்கு நாள் தம்பதியிடம் தகராறு வெடிக்கவும், ஒருகட்டத்தில் கணவனிடம் கோபித்துக் கொண்டு மதுரைக்கே சென்றுவிட்டார் இளம் மனைவி. இதனால் கணவர், மனைவியை சமாதானம் செய்து, அழைத்து வருவதற்காக மதுரைக்கு சென்றார்.. இனிமேல் தகராறு செய்ய மாட்டேன் என்று சமாதானப்படுத்தியதுடன், குடும்பம் நடத்த வருமாறும் அழைத்துள்ளார்..

அதிர்ச்சி: உடனே மனைவியும், அந்த பேச்சை நம்பி, கன்னியாகுமரிக்கு வர சம்மதித்தார்.. அதன்படி, மனைவி, குழந்தையை ரெயில் மூலம் நேற்று முன்தினம் அழைத்து வந்திருக்கிறார் கணவர்.. ரயிலில் 3 பேருமே உட்கார்ந்திருந்தார்.. அப்போது கணவர், கண் அசந்து சிறிது நேரம் தூங்கியிருக்கிறார்.

பிறகு தூக்கத்திலிருந்து கண்விழித்து பார்த்தபோது, பக்கத்திலிருந்த மனைவி, குழந்தையை காணவில்லையாம்.. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், உடனடியாக தக்கலை போலீசுக்கு தகவல் தந்தார்.. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினார்கள்.

செல்போன் சிக்னல் : குறிப்பாக, பெண்ணின் செல்போன் சிக்னலை போலீசார் கண்காணித்தனர். அதில் அந்த பெண் வெள்ளிச்சந்தை பகுதியில் இருப்பது தெரியவந்ததையடுத்து, அங்கு விரைந்து சென்றனர்..

அப்போது இளம் மனைவியுடன், வேறொரு இளைஞர் உடனிருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.. இதற்கு பிறகு நடந்த விசாரணையில்தான், இளம் மனைவியின், "திடீர் கள்ளக்காதல்" விவகாரமும் போலீசாருக்கு தெரிந்துள்ளது.

பஸ் ஸ்டாண்டு: அதாவது ஆரம்பத்தில், கணவரிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய மனைவி, நேராக நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தாராம்.. அங்கு வெள்ளிச்சந்தை அருகே, இளைஞர் ஒருவரை சந்தித்துள்ளார்.. கைக்குழந்தையுடன் பெண் தனியாக பஸ் ஸ்டாண்டில் நிற்பதை பார்த்த அந்த இளைஞர், நைசாக பேச்சு தந்திருக்கிறார்.

உடனே அந்த பெண்ணும், குடிகார கணவர் மீதான கோபத்தில், தன் அம்மா வீட்டுக்கு மதுரைக்கு செல்வதாக பதிலளித்துள்ளார்.. பிறகு அங்கு வந்த மதுரை பஸ்ஸில் பெண் ஏறிவிடவும், பின்னாடியே அந்த இளைஞரும், பஸ்சில் ஏறி பெண்ணுடன் பயணித்துள்ளார்.. நாகர்கோலிலிருந்து மதுரை வரை, இருவரும் ஒன்றாக பயணித்திருக்கிறார்கள். அப்போது இளைஞர் பேச பேச, அந்த பேச்சில் இளம் மனைவி விழுந்துள்ளார்.

இளம் மனைவி: இளைஞரின் பேச்சு , நடவடிக்கை எல்லாமே இளம் மனைவிக்கு பிடித்துவிடவும், அவருடனேயே சேர்ந்து வாழ முடிவெடுத்தார்.. இவ்வளவும் "ஆன் தி வே" பயணத்தில் நடந்துள்ளது..

பிறகு, இளைஞருடன் சேர்ந்த வாழ, திருநெல்வேலி ரெயில்வே ஸ்டேஷனிலேயே அவருடனேயே இறங்கிவிட்டார்.. அந்த இளைஞரும், இந்த பெண்ணை வெள்ளிச்சந்தை பகுதிக்கு அழைத்து சென்று குடும்பமும் நடத்தியிருக்கிறார்.. இப்போதுகூட, ரயிலில் கணவர் தூங்கும்போது, நைஸாக ரயிலைவிட்டு இறங்கி, வெள்ளிச்சந்தையிலுள்ள இளைஞர் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.. இவ்வளவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, இளம் மனைவியை போலீசார் எச்சரித்தார்கள்.

அட்வைஸ்: கணவர் இருக்கும்போது கள்ளக்காதலனுடன் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.. அதற்கு அந்த பெண், குடிகாரன் கூட எப்படி வாழ முடியும்? என்று போலீசாரிடம் கேட்டார்.

அதற்கு போலீசார், "அதுக்காக கள்ளக்காதலுக்கெல்லாம் நாங்கள் ஒத்துழைக்க முடியாது" என்று சொல்லி, அந்த பெண்ணை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+