கன்னியாகுமரி கேவலம்.. கணவர் முன்பே பாஜக பிரமுகருக்கு முத்தம் தந்த மனைவி.. இப்ப அருமனை அடுத்த கொடுமை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பாஜக பிரமுகருக்கு, தன்னுடைய கணவர் முன்னிலையிலேயே மனைவி முத்தம் தந்துள்ளார்.. இதையடுத்து நடந்த கலவரத்தில், தலைமறைவாகியிருந்த பாஜக பிரமுகரை போலீசார் வலைவீசி கொண்டிருந்த நிலையில், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.. ஆனால், ஜாமீனில் வெளிவந்த பாஜக பிரமுகர் என்ன செய்தார் தெரியுமா?
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி குமாரபவன் பகுதியை சேர்ந்தவர் அனிகுட்டன் என்கிற அனில்குமார்.. இவருக்கு 48 வயதாகிறது. அந்த பகுதியிலேயே ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி உமாவுக்கு 40 வயதாகிறது (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

மளிகை கடை தம்பதி
எனினும் இந்த தம்பதிக்கு இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகவும், இதன்காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாகவும் தெரிகிறது. பத்துகாணி சந்திப்பு பகுதியில், மளிகை கடை ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார் உமா.. ஆட்டோ ஓட்டாத நேரங்களில் இந்த மளிகை கடையில், அனில்குமாரும் வந்து வியாபாரத்தை கவனித்து கொள்வார்.
பத்துகாணி நிஜாபவன் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் மதுகுமார். 52 வயதாகும் மதுகுமார், ஆறுகாணி கிளை பாஜக செயலாளராக இருப்பவராம்.. இவர் ஏற்கனவே கடையாலுமூடு பேரூராட்சி 9வது வார்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
மளிகை கடையில் அலப்பறை
இவர் கடந்த மாதம், உமாவின் மளிகை கடைக்கு சென்று, உமாவுக்கு முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.. மனைவிக்கு இன்னொருவர் முத்தம் தருவதை பார்த்ததும் அனில்குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.. இதனால் மனைவியை திட்டியதுடன், கண்டித்தும் இருக்கிறார்.. இதன்காரணமாக மறுபடியும் தம்பதிக்குள் சண்டை வெடித்திருக்கிறது.
எந்நேரமும் தனக்கு கணவன் அட்வைஸ் செய்து கொண்டேயிருந்ததால் எரிச்சலடைந்த உமா, கணவரை கட்டையால் அடித்து தாக்கிவிட்டார்.. இதில், அனில்குமார் படுகாயம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.. அதுமட்டுமல்லாமல், மறுநாள் பாஜக மதுகுமார், அனில்குமாரிடம் சென்று தகராறு செய்ததுடன், அசிங்கமான கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.. மேலும் மிகப்பெரிய கத்தியால், அனில்குமாரை வெட்ட முயன்றுள்ளார்.
தீவிரமான சிகிச்சை
நீளமான கத்தியை பார்த்து அதிர்ச்சியடைந்த அனில்குமார், உயிரை காப்பாற்றிக் கொள்ள தப்பித்து ஓடியிருக்கிறார். எனினும் பலத்த காயமடைந்தார்.. மனைவியிடமும், மதுகுமாரிடமும், அடிவாங்கிய அனில்குமார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடந்தது.. பிறகு, நடந்த சம்பவங்கள் தொடர்பாக அனில்குமார் ஆறுகாணி போலீசில் புகார் தந்தார்..
இந்த புகாரின் பேரில் போலீசாரும், உமா மற்றும் மதுகுமார் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்கள் இருவரையுமே வலைவீசி தேடி வந்தனர்.. இருவரும் ஒன்றாகவே தலைமறைவாகிவிட்டார்களா? அல்லது தனித்தனியாக மறைந்திருக்கிறார்களா? என்று தெரியாததால், தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.. இதுகுறித்த செய்திகளும் மீடியாவில் அப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
உல்லாசம் - கண்டிப்பு
இதனிடையே, மது குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். ஆனால், ஜாமீனில் வெளியே வந்த மது குமார், மறுபடியும் உமாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அனில்குமார், மீண்டும் உமாவை கண்டித்து உள்ளார். ஆனால் உமா, கணவன் பேச்சை மதிக்கவில்லை..
இதனால் ஆத்திரம் அடைந்த அனில்குமார், மளிகை கடையிலேயே இரும்பு கம்பியை எடுத்து, இன்று உமாவை கடுமையாக தாக்கினார்.. இதில் தலையில் பலத்த காயமடைந்த உமா, அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். ஆனால், உமா இறந்துவிட்டதாக நினைத்து பயந்துபோன அனில்குமார், வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..
பரிதாப கணவர்
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆறுகாணி போலீசார், உயிருக்கு போராடி கொண்டிருந்த உமாவை மீட்டு கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. தற்கொலை செய்து கொண்ட அனில் குமாரின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து, போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications