ஆசையாக கன்னியாகுமரி காதலியிடம் வந்த காதலன்.. வாசலில் நின்ற தாய் கேட்ட கேள்வி! உடனே அந்த பகீர் காட்சி

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ள இந்த கொடூர சம்பவம், உறவுகளுக்கு இடையிலான விரிசலையும் நவீன கால காதல் மோகத்தின் விபரீதத்தையும் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இப்படியும் பெற்ற மகள் இருப்பாரா? என்ற அதிர்ச்சி கேள்வியும் பெற்றோர்களை திகைக்க வைத்து வருகிறது.. என்ன நடந்தது கன்னியாகுமரி மாவட்டத்தில்?

நாகர்கோவில் அருகே உள்ள பிள்ளையார்புரம் பகுதியில், அன்னம் வலை கம்பெனி தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருடைய மனைவி பெயர் கலாவதி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

கன்னியாகுமரி காதலர்கள்

இதில் மூத்த மகள் நர்சிங் பயின்று வர, இரண்டாவது மகளான 19 வயது சுருதி நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

காலேஜ் சென்றதுமே சுருதிக்கு, தன்னுடன் ஒரே கிளாஸில் படிக்கும் அபிலாஷ் என்ற மாணவருடன் காதல் மலர்ந்துள்ளது. திங்கள்சந்தை அருகே உள்ள மேற்கு நெய்யூர் பகுதியைச் சேர்ந்தவல்ர அபிலாஷ்..

10 பவுன் தங்கம்நகை

இந்நிலையில், குடும்பத்தின் அவசர தேவைக்காக கலாவதி சேமித்து வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள் திடீரென மாயமாகின. காணாமல் போன நகைகள் குறித்து கலாவதி தனது மகள் சுருதியிடம் விசாரித்தபோதுதான், அந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்தது. தனது காதலன் அபிலாஷிற்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால், அம்மாவுக்கு தெரியாமல் அந்த 10 பவுன் நகைகளையும் சுருதி அவரிடம் கொடுத்து விட்டாராம்.

கஷ்டப்பட்டு சேர்த்த நகைகளை மகள் இப்படித் துணிச்சலாக காதலனிடம் ஒப்படைத்ததைக் கேட்டு நிலைகுலைந்து போன கலாவதி, உடனடியாக அந்த நகைகளை திருப்பி வாங்கி தருமாறு மகளிடம் கேட்டுள்ளார்.. இது தொடர்பாக கடந்த சில நாட்களாகவே தாய் மற்றும் மகளுக்கு இடையே வீட்டில் கடும் வாக்குவாதங்களும் தகராறுகளும் நீடித்து வந்தன. நகையைத் திருப்பிக் கேட்கும் போதெல்லாம் சுருதி மழுப்பலாக பதிலளித்து வந்ததாக கூறப்படுகிறது.

பெற்ற தாய் கேட்ட கேள்வி

இந்த நிலையில், நேற்று சுருதியின் வீட்டிற்கு அவரது காதலன் அபிலாஷ் நேரில் வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த கலாவதி, அபிலாஷை நேருக்கு நேராகவே சந்தித்து, "எனது நகைகள் எங்கே? அவற்றை எப்போது திருப்பித் தருவாய்?" என்று ஆவேசமாக கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அபிலாஷ், அருகில் கிடந்த உருட்டுக் கட்டையை எடுத்து கலாவதியின் பின்னந்தலையில் பலமாகத் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் கலாவதி நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

காதலன் தாக்கியதில் கலாவதி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.. இதை பார்த்து கொஞ்சமும் பதறாத சுருதி, தன்னுடைய சுடிதார் துப்பட்டாவால் கலாவதியின் கழுத்தை இறுக்கி, பெற்ற தாயை அங்கேயே துடிக்கத் துடிக்கக் கொலை செய்ய முயன்றனர். கலாவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, பெற்ற தாயையே மகள் காதலனுடன் சேர்ந்து கொல்ல முயன்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

நாகர்கோவில் சம்பவம்

பிறகு அக்கம் பக்கத்தினரை பார்த்ததுமே காதல் ஜோடி அங்கிருந்து தப்பிக்க முயன்றது.. உடனே அவர்களை சுற்று வளைத்து பிடித்த மக்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கலாவதியையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, சுருதி மற்றும் அபிலாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை ஜெயிலிலும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இப்போது சுருதி தக்கலை கிளை சிறையிலும், அபிலாஷ் நாகர்கோவில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 10 பவுன் நகைக்காக பெற்ற தாயையே கொல்லத் துணிந்த மகளின் செயல் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+