கல்யாண மண்டப உரிமையாளர்களுக்கு கன்னியாகுமரி கலெக்டர் அழகு மீனா முக்கிய உத்தரவு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் சுபநிகழ்ச்சிகள் என்ற பெயரில் மக்களை கூட்டி பரிசு பொருட்கள் வழங்குவது, வேட்டி, சேலை, மதுபாட்டில்கள் வழங்குவது மற்றும் பணம் கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது தெரியவந்தால் அதை உடனடியாக தொடர்புடைய தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த ஞாயிறு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் அச்சகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குகளின் உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் கலெக்டருமான அழகுமீனா தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கவிதா (பொது), ரோஷன் பேகம் (தேர்தல்), உதவி மேலாளர் (குற்றவியல்) தாஜூநிஷா, தேர்தல் தனி தாசில்தார் வினோத் மற்றும் அச்சகம் மற்றும் திருமண மண்டபம் மற்றும் கூட்ட அரங்கு உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா அவர்களிடம் பேசும் போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளரும் வெளியூரில் இருந்து வரும் நபர்களை குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மிகாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு தங்க அனுமதிக்க வேண்டும். கல்யாண மண்டபம் மற்றும் கூட்ட அரங்கில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளை தவிர வேறு எந்த அரசியல் தொடர்புடைய கூட்டங்கள் நடத்த பதிவு செய்யப்பட்டால், அதன் விவரத்தை முன்கூட்டியே தொடர்புடைய தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் சுபநிகழ்ச்சிகள் என்ற பெயரில் மக்களை கூட்டி பரிசு பொருட்கள் வழங்குவது, வேட்டி, சேலை, மதுபாட்டில்கள் வழங்குவது மற்றும் பணம் கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது தெரியவந்தால் அதை உடனடியாக தொடர்புடைய தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் தேர்தல் நடைபெறும் காலங்களில் விடுதிகளில் தங்க அனுமதி கோரும் நபர்களிடம் ஆதார் (அல்லது) புகைப்பட அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை நகல்களை பெற்ற பின்னரே தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த அனுமதி ஏதேனும் பெறப்பட்டிருப்பின் கூட்டம் முடிவுற்றதும் பதாகைகள், கட்சி கொடிகள், விளம்பரங்கள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். வாக்கு சேகரிக்கும் நோக்கில் பரிசுப்பொருட்கள், உபகரணங்கள் எதுவும் மண்டபத்தினுள் வைக்க அனுமதிக்க கூடாது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அச்சகங்களில் தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் ஆகியவை அச்சடிக்கும் நேர்வுகளில் அரசியல் கட்சிகள் பெயர், எண்ணிக்கை ஆகிய விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அச்சடிக்கப்படும் சுவரொட்டிகள், கைப்பிரதிகள், விளம்பர பேனர் போன்றவற்றில் அச்சகத்தின் பெயர் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்" இவ்வாறு கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications