நில அளவை பணி தீவிரம்.. 31000 பேருக்கு பட்டா.. கன்னியாகுமரி கலெக்டர் வெளியிட்ட குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மறுநில அளவை மேற்கொள்ளபட்டதின் அடிப்படையில் அகஸ்தீஸ்வரம் தாலுகாவை முன்மாதிரி தாலுகாவாக தேர்வு செய்யப்பட்டு 36 கிராமங்கள் மாவட்ட அரசிதழில் விளம்பரம் செய்து நில அளவை பதிவேடுகள் துறை நிலஅளவர்களைக் கொண்டு நவீன மறுநில அளவைப்பணி நடைபெற்று வருகிறது என்றும் 6 வருவாய் கிராமங்களில் 31,117 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்படும் என்று கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார்.

தமிழக அரசு வரும் ஓராண்டில் மட்டும் 5 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. புறம்போக்கு நிலங்களில் பல வருடங்களாக குடியிருந்து வருவோருக்கு பட்டா வழங்கப்படுகிறது.. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தாலுகா வாரியாக பல வருடங்களாக குடியிருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அப்படி சேகரிக்கப்படும் விவரங்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள் பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.. அதேபோல் நிலவரி திட்டப்பணிகள் மேற்கொண்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Kanyakumari Collector announces that 31000 beneficiaries will be given patta in Agastheeswara

இந்நிலையில் பட்டா வழங்குவது குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கவும், வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மறுநில அளவை மேற்கொள்ளபட்டதின் அடிப்படையில் அகஸ்தீஸ்வரம் தாலுகாவை முன்மாதிரி தாலுகாவாக தேர்வு செய்யப்பட்டு 36 கிராமங்கள் மாவட்ட அரசிதழில் விளம்பரம் செய்து நில அளவை பதிவேடுகள் துறை நிலஅளவர்களைக் கொண்டு நவீன மறுநில அளவைப்பணி நடைபெற்று வருகிறது.

அதில் 14 கிராமங்கள் நவீன தொழில் நுட்பக்கருவியினை பயன்படுத்தி துல்லியமாக நிலஅளவைப்பணிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று நிதிநிலை அறிக்கையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையில் கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 6 வருவாய் கிராமங்களில் 31,117 பயனாளிகள் பயன்பெறும் வகையில் நிலவரித்திட்டப்பணிகள் மேற்கொண்டு பட்டா வழங்கப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+