கன்னியாகுமரியில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு.. கல்வி நிறுவனங்கள் விஷயத்தில் கலெக்டர் வார்னிங்
நாகர்கோவில்: தற்போது பிளஸ் 2 முடித்து உயர் கல்வியில் சேர இருக்கும் மாணவ, மாணவிகள், அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் கல்வி இடங்களில் அரசு கல்லூரிகளில் சேர்ந்திட வேண்டும் என்றும் அங்கீகாரம் பெறாத உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் சேரக்கூடாது என்றும் கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் பெயர் பட்டியல் https://kanniyakumari.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பிளஸ் 2 முடித்த பலர் உயர் கல்வியில் சேர கல்லூரிகளை தேர்வு செய்வதில் மும்முரமாக இருக்கிறார்கள். வழக்கத்தைவிட இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர அதிகப்படியான மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல் நீட் தேர்விலும் ஏராளமானோர் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர ஆர்வமாக இருக்கிறார்கள். அதேபோல் கலை பிரிவிலும் சேர ஏராளமான மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாணவ, மாணவிகளை சேர வைக்க போட்டி போட்டு விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. இந்தியாவிலேயே அதிகப்படியான கல்லூரிகள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதா என்று கூறும் அளவிற்கு திரும்பிய பக்கம் எல்லாம் கல்லூரிகள் இருக்கிறது.

அகில இந்திய உயர்கல்வி ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி, உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 49 சதவீதம் பெற்று இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது. இது அகில இந்திய சராசரியைவிட 2 மடங்கு அதிகம் ஆகும். இந்தியாவில் உயர் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் அதிகம் பேர் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதேநேரம் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் சேர்ந்து ஏமாறக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் பல்வேறு கட்டங்களாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் உயர் கல்வியில் சேர்ந்த பல மாணவர்கள் அங்கீகாரம் பெறாத தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்ந்தமையால், கல்வி உதவி வங்கி கடன், அரசின் உதவித்தொகை முறையே தமிழ்புதல்வன், புதுமைப்பெண் முதலானவற்றை கிடைக்க தகுதி பெறவில்லை.
தற்போது பள்ளி கல்வியை முடித்து உயர் கல்வியில் சேர இருக்கும் மாணவ, மாணவிகள், அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் கல்வி இடங்களில் அரசு கல்லூரிகளில் சேர்ந்திட வேண்டும். அங்கீகாரம் பெறாத உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் சேரக்கூடாது.
அங்கீகாரம் பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள் அளிக்கின்ற சான்றிதழ் அரசால் அங்கீகாரம் பெறப்படாதவை. அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் பெயர் பட்டியல் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் https://kanniyakumari.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் தவிர பிற நிறுவனங்கள் அனைத்தும் அங்கீகாரம் பெறப்படாதவைகளே ஆகும். எனவே அங்கீகாரம் பெறப்படாத கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் எதிர்காலத்தை கேள்விகுறியாக்காமல் மாணவர்கள் செயல்பட வேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications