கன்னியாகுமரி கோர்ட் ஊழியர் நாகராஜ் வெளியிட்ட கடைசி ஆடியோ.. அரசு அதிகாரிகள் மீது பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் என்பவர் குழித்துறை கோர்ட்டில் அலுவலக பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மனைவி உமா மகேஸ்வரியிடம் அலுவலக பணியில் கடும் பணிச்சுமை இருப்பதாக கூறி வந்துள்ளார். நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவரது அறை திறக்கப்படவில்லை.. அவர் பேசிய கடைசி ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டக்கரை பகுதியை சேர்ந்த 38 வயதாகும் நாகராஜன் என்பவர் குழித்துறை கோர்ட்டில் அலுவலக பணியாளராக வேலை பார்த்து வந்திருக்கிறார். இவர் கடந்த சில நாட்களாக மனைவி உமா மகேஸ்வரியிடம் அலுவலக பணியில் கடும் பணிச்சுமை இருப்பதாக கூறி வந்தாராம்.

Kanyakumari Court Employee Nagaraj s last audio released what happened

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நாகராஜன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்றுள்ளார். நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவரது அறை திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி உமா மகேஸ்வரி அறையின் கதவை தட்டினாராம். ஆனாலும் அவர் கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த உமா மகேஸ்வரி அறையின் ஜன்னலை திறந்து பார்த்தபோது நாகராஜன் தூக்கில் தொங்கிய நிலையில், இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுபற்றி நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கோர்ட் ஊழியர் நகராஜின் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பணிச்சுமை காரணமாக நாகராஜன் உயிரை விட்டது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே கோர்ட் ஊழியர் நாகராஜ் பணிச்சுமை தொடர்பாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளாராம். அவர் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நாகராஜ் வெளியிட்ட 1 நிமிட வீடியோவில், வேலை பார்க்கும் இடத்தில் அதிகாரிகள் அவதூறாக பேசுறாங்க. இதனால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இருப்பினும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என நினைத்தேன்.. ஆனால் தப்பான முடிவெடுத்து விடுவோமா? என்ற பயம் உள்ளது என கூறியிருந்தார். இந்த ஆடியோவை கைப்பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+