மாமியாருடன் சண்டை.. இரவில் யாருக்கும் தெரியாமல் ஆசிரியை எடுத்த பகீர் முடிவு! ஆடிப்போன குமரி
குமரி: குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பள்ளி ஆசிரியை எடுத்த விபரீத முடிவால் அப்பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கணவர் சத்தீஸ்கரில் வேலை பார்த்து வரும் நிலையில், வீட்டில் இருந்த மாமியார் திட்டியதால் மனம் உடைந்து இந்த சோக முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 34). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் வேலை பார்த்தார். அப்போது அவருக்கு லேகா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது.

பள்ளி ஆசிரியை
இருவரும் நட்பாக பேசி பழகினர். தொடர்ந்து நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியது. இதற்கு பின்னர் காதலியை குமரிக்கு அழைத்து வந்தார். பின்னர் மகேஷுக்கும் லேகாவுக்கும் திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகேஷ் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இந்தியாவில் இவ்ளோ சுத்தமான இடமா? நான் என்னமோ நினைச்சேன், ஆனால்! மெய்சிலிர்த்த ஜெர்மன் சுற்றுலாவாசி
மாமியார் திட்டியதால்
லேகா அஞ்சுகிராமம் அருகே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். வீட்டில் மகேஷின் தாயும் இருந்து வருகிறார். இருவரும் சேர்ந்து வீட்டு வேலை பார்த்துவிட்டு குழந்தைகளையும் பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாமியார்-மருமகள் இடையே கசப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டு வேலைகளை மருமகள் லேகா சரியாக செய்யவில்லை என மாமியார் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் லேகா கடும் மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென சேலையால் தூக்குப்போட்டுள்ளார். இதற்கிடையே வெளியே சென்றிருந்த மாமியார் வீட்டில் வந்து பார்த்ததும் லேகா தூக்கில் தொங்கியபடி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
போலீசார் விசாரணை
அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார் லேகாவின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டில் வந்து விசாரணை நடத்தினர். மாமியார் திட்டியதால் மருமகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மனஅழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
-
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications