போலீஸில் சிக்காமல் கொல்வது எப்படி.. எது மெல்ல கொல்லும் விஷம்.. கூகுளில் தேடிய கிரீஷ்மா.. பகீர் தகவல்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே களியகாவிளை பகுதியில் காதலனை கொலை செய்த காதலி எந்த விஷத்தை கொடுப்பது போன்ற விஷயங்களை கூகுளில் கிரீஷ்மா தேடியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
களியக்காவிளை அருகே கேரளாவில் பாறசாலை மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (23). இவர் ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (22) என்பவரை காதலித்து வந்தார்.
இருவரும் காதலித்த போது பல இடங்களுக்கு சென்றுள்ளனர். இது தொடர்பாக இருவருமே நிறைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து வைத்துள்ளனர். இந்த நிலையில் தனித்தனியாக வசித்து வந்த போதிலும் கணவன் மனைவி போல் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

ஷாரோன் ராஜ்
கிரீஷ்மாவை ஷாரோன் ராஜ் உயிருக்கு உயிராக நேசித்துள்ளார். ஆனால் அவருக்குத்தான் கிரீஷ்மா மிகப் பெரிய துரோகத்தை செய்துள்ளார். கிரீஷ்மாவுக்கு அவருடைய வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். அப்போது பெரிய இடத்து பையன் சிக்கியதால் ஷாரோன் ராஜை கழற்றிவிடுமாறு கிரீஷ்மாவுக்கு அவருடைய பெற்றோரும், தாய்மாமாவும் அறிவுறுத்தினர்.

புதிய மாப்பிள்ளை
இதையடுத்து புதிய மாப்பிள்ளையின் ஆடம்பர வாழ்க்கைக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்ட கிரீஷ்மா, உயிருக்கு உயிராக காதலித்த ஷாரோனை விட்டு விலக முடிவு செய்தார். ஆனால் தான் அவருடன் சுற்றித் திரிந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இருக்கிறதே , அதை வைத்து நம் கல்யாணத்தில் ஷாரோன் தகராறு செய்வாரோ என கிரீஷ்மாவுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.

ஷாரோன் ராஜ்
இதனால் குடும்பத்தினருடன் சேர்ந்து ஷாரோனை கொலை செய்ய கிரீஷ்மா திட்டம் போட்டார். இதற்காக ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். ஷாரோனை தனது வீட்டில் யாரும் இல்லை என கூறி வரவழைத்துள்ளார். அவரும் தனது நண்பருடன் சென்றுள்ளார். நண்பர் வாசலில் காத்திருக்க ஷாரோன் மட்டும் உள்ளே சென்றுள்ளார். அவருக்கு ஏதோ கசாயத்தையும் குளிர்பானத்தையும் குடிக்க கொடுத்துள்ளார் கிரீஷ்மா.

அத்தனை பாசம்
காதலி மேல் உள்ள பாசத்தினாலும் மயக்கத்தினாலும் அதை வாங்கி குடித்துவிட்டு கிளம்பினார். ஆனால் அவருக்கு அந்த ஜூஸையும் கசாயத்தையும் குடித்தது முதல் வயிறு வலிக்க தொடங்கியது. இதையடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாரோன் ராஜின் உடல் உறுப்புகள் செயலிழந்து ஆபத்தான நிலையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிரீஷ்மா வீட்டில் குடித்த கசாயம்
இதையடுத்து ஷாரோன் ராஜின் பெற்றோர், ஷாரோனின் நண்பரிடம் விசாரித்ததில் கிரீஷ்மா வீட்டில் கசாயம், குளிர்பானம் குடித்த போதிலிருந்தே வயிறு வலிப்பதாக ஷாரோன் கூறியதாக அந்த நண்பர், பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் போலீஸில் கிரீஷ்மா மீது ஷாரோன் ராஜின் பெற்றோர் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் கிரீஷ்மாவை கைது செய்த போலீஸார் அவருடைய செல்போனை ஆய்வுசெய்தனர்.

செல்போனில் பகீர் தகவல்கள்
அதில் பல பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன. எந்த விஷத்தை கொடுத்தால் போலீஸிடம் மாட்டிக் கொள்ளாமல் ஷாரோனை கொல்லலாம் என்பது குறித்து கூகுளில் தேடியுள்ளாராம். ஒரு வேளை போலீஸிடம் மாட்டிக் கொண்டால் என்ன செய்யலாம். எத்தனை ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்பதையும் ஆராய்ந்துள்ளாராம். அது போல் போலீஸில் சரணடைவதற்கு முன்னர் அவர்கள் என்ன கேட்பார்கள், நாம் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பது குறித்த சட்ட ஆலோசனைகளையும் பெற்றுவிட்டு தாமதமாகவே போலீஸில் சரணடைந்ததாக காவல் துறையினர் சொல்கிறார்.

கிரீஷ்மா யோசிக்காதது ஏனோ?
இத்தனை நடந்த பிறகும், ஷாரோன் ராஜ் வயிற்று வலியால் துடித்த போதும் தனது நண்பரிடமும் கிரீஷ்மாவிடமும் ஜூஸ் குறித்தும் கசாயம் குறித்தும் யாரிடமும் எதையும் சொல்ல வேண்டாம் என கூறி தனது காதலியை காப்பாற்ற நினைத்தாராம். அப்படிப்பட்டவரா தனது திருமணத்திற்கு தடையாக இருந்து புகைப்படங்களை காட்டி பிரச்சினைகளை செய்வார் என கிரீஷ்மா நினைக்காமல் போனது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications