சினிமா பாணியில் கன்னியாகுமரியில் நடக்கும் காதல்.. இளைஞர்கள் எடுக்கும் முடிவுகளால் மலைக்கும் குளச்சல்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர், அந்த பகுதியில் வசித்து வரும் பெண்ணை காதலித்துள்ளார்.. அந்த பெண்ணும் இளைஞரை காதலித்து வந்துள்ள நிலையில், திடீரென இப்படியொரு ட்விஸ்ட் நடந்துள்ளது.. இது சம்பந்தமாக இளைஞர் எடுத்த முடிவால், குளச்சல் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சலேட்நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் சுபித்.. 22 வயதாகும் சுபித், பிஎஸ்சி பயோடெக்னாஜி படித்துள்ள சுபித், மணவாளக்குறிச்சியிலுள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.

கல்லூரி மாணவி
தான் காலேஜ் படிக்கும்போது, தன்னுடன் படித்த தோழியை காதலித்தார்.. அந்த மாணவியும் சுபித்தை உயிருக்கு உயிராக விரும்பினார்.. காலேஜ் முடிந்து வேறு இடத்தில் பணிபுரிந்தாலும், வாழ்க்கையில் முன்னுக்கு வந்து, காதலியை திருமணம் செய்துகொள்வது என்ற முடிவிலும் உறுதியாக இருந்தார் சுபித்.
ஆனால், திடீரென, கடந்த வாரம் அந்த பெண்ணிற்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நடந்துவிட்டது. இந்த விஷயம் கேள்விப்பட்டு, அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார் சுபித்.. கடந்த வாரத்திலிருந்தே கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்...
எந்நேரமும் கலக்கமும், கண்ணீருமாகவே இருந்துள்ளார்.. இதைப்பார்த்து வருத்தப்பட்ட சுபித்தின் உறவினர்களும், நண்பர்களும் அவருக்கு பலவகைகளில் சமாதானம் சொல்லி, தேற்ற முயன்றனர்.. எனினும், சுபைத் இயல்பு நிலைமைக்கு திரும்பவில்லை..
கடுமையான மன உளைச்சல்
தன்னைதான் திருமணம் செய்து கொள்வார் என்று நம்பிக் கொண்டிருந்த காதலி, திடீரென இன்னொரு நபருடன் திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சியிலேயே சுபைத் உறைந்துபோனார்..
இதனால் கடந்த 31ம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துவிட்டார்.. இவரை பார்த்து பதறிப்போன குடும்பத்தினர் அவரை மீட்டு குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டார் சுபித்.. எனினும், நேற்று பரிதாபமாக சுபித் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிக்கு வேறொரு நபருடன் திருமணமானதால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரப்பர் மரத்தில் இளைஞன்
கடந்த வாரம்கூட இதே கன்னியாகுமரியில் அதிர்ச்சிதரக்கூடிய தற்கொலை சம்பவம் நடந்தது.. அதாவது ஜிதின் என்ற இளைஞர், இளம்பெண் ஒருவரை காதலித்து, அப்பெண்ணின் வீட்டுக்கு வந்து முறைப்படி பெண்ணும் கேட்டுள்ளார். ஆனால் பெண்ணின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தங்கள் மகளை அவசர அவசரமாக வேறொரு இளைஞருக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர்...
இந்த திருமணத்தில் மகளுக்கும் விருப்பமில்லை.. ஆனால், காதலிக்கு நிச்சயம் நடந்ததை கேள்விப்பட்ட இளைஞர், ரப்பர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.. இதைக்கேள்விப்பட்ட காதலியும் விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பேயே மற்றொரு தற்கொலை குமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications