உண்டியலையே அதிகாலை 4 மணிக்கு உற்றுப்பார்த்த நபர்..கன்னியாகுமரி லாக்கரில் ரூ.50 லட்சம் நகை? ட்விஸ்ட்
கன்னியாகுமரி: நாளுக்கு நாள் கோயில்களில் உண்டியல் திருட்டு நடப்பதாக புகார்கள் கிளம்பி வரும்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.. இதுகுறித்த கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் கருங்கல் போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.
கருங்கல் அருகே பாலவிளையில் ஸ்ரீபத்ரேஸ்வரி அம்மன், இசக்கியம்மன், சிவன் கோயில்கள் அமைந்துள்ளன... இந்த சுற்றுவட்டாரத்திலேயே இது மிக முக்கிய கோயில் என்பதால், நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்ய வருவது வழக்கம்.. இதனால், காணிக்கைகளும் இந்த கோயிலுக்கு அதிகமாக பெருகும்.

கண்காணிப்பு கேமராக்கள்
இதை குறிவைத்து, மர்மநபர்கள், கோயிலிலிருந்த உண்டியலை பலமுறை திருடியிருக்கிறார்கள்.. இதையடுத்துதான், இந்த கோயிலில், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், நேற்று காலை கோயில் நிர்வாகிகள் கோயிலுக்குள் நுழைந்தபோது, அங்கிருந்த கோயில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது.. உண்டியிலிலிருந்த பொருட்கள் சிதறி விழுந்து கிடந்திருந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கோயில் அதிகாரிகள், உடனடியாக அங்கிருந்த கேமராவை ஆராய்ந்தனர்.
விடிகாலை 4 மணிக்கு வந்த மர்மநபர்
அதில், விடிகாலை 4 மணிக்கு ஒருநபர் கையில் ஆயுதத்துடன், முகமூடி அணிந்து வருவது பதிவாகியிருந்தது.. அந்த நபருக்கு 40 வயதிருக்கலாம் என தெரிகிறது.. கோயில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து, உள்ளே வந்த அந்த நபர், நேராக இசக்கியம்மன் கோயில் சன்னிதிக்கு வந்து, அங்கிருந்த உண்டியலை உடைக்க முயன்றார். ஆனால், அந்த உண்டியல் மிகப்பெரியதாக இருந்ததால், அந்த நபரால் அதை உடைக்க முடியவில்லை.
எனவே, அங்கிருந்து நேராக பத்ரேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்ற அந்த நபர், அங்கிருந்த உண்டியலை பெயர்த்து எடுத்து சென்றுவிட்டார். இதுவும், அங்கிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த உண்டியலில் சுமார் ரூ.5 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று நிர்வாகிகள் கூறுகிறார்கள்.. இந்த திருட்டு சம்பவம் குறித்து கோயில் தலைவர் பிரேம்சிங் கருங்கல் போலீசில் புகார் தந்ததையடுத்து, போலீசாரும் இதனை விசாரித்து வருகிறார்கள்.
தப்பிய லாக்கர் நகைகள்
ஆனால், கோயிலில் திருட்டுகள் பலமுறை ஏற்கனவே நடந்ததால், நகைகளை கோயில் வளாகத்திலுள்ள பாதுகாப்பான அறையில், லாக்கரில் வைக்கப்பட்டிருக்கிறதாம்.. லாக்கரில் உள்ள நகைகளின் மதிப்பு மட்டும் ரூ.50 லட்சம் இருக்கும் என்கிறார்கள்.. ஒருவேளை இந்த நகைகளை லாக்கரில் வைக்காமல் போயிருந்தால், இவைகளும் உண்டியல் பணத்துடன் சேர்ந்து போயிருக்குமாம்..
எனினும், பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்லும் இந்த கோயில்களில் திருட்டு சம்பவம் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.












Click it and Unblock the Notifications