50 பவுன், சொந்த வீடு, 2 பைக், 6 லட்சம்.. இத்தனை கொடுத்தும் என் மகளை கொன்னுட்டாங்க - கதறி அழுத தாய்
கன்னியாகுமரி: திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணைக் கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டு சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. அந்த சோக சம்பவத்தில் இருந்து வெளிவருவதற்கு முன்பே, கன்னியாகுமரி மாவட்டம், திக்கணக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெபலா மேரி என்ற இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்துக்காக ஏற்கனலே 50 பவுன் நகை, பைக், 6 லட்சம் ரூபாய் ரொக்கம் என கொடுத்தும் கூட எனது மகளை தொடர்ந்து டார்ச்சர் செய்து கொன்றுவிட்டதாக தாய் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.
300 பவுன் நகை, 10 லட்சத்தில் சொகுசு கார், கோடிகளில் செலவழித்து பிரம்மாண்ட திருமணம் என தனது மகளுக்காக பார்த்து பார்த்து திருமணம் செய்து வைத்தனர் திருப்பூர் ரிதன்யாவின் பெற்றோர். ஆனால், 78 நாட்களில் படாத துன்பங்களை எல்லாம் பட்டு, வரதட்சணைக் கொடுமையாலும், கணவரின் சித்திரவதையாலும் தனது உயிரையே ரிதன்யா மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிதன்யா மற்றும் அவரது கணவர் குடும்பத்தினர் தொடர்பாக நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே, திருப்பூர் சம்பவத்தைப் போலவே, கன்னியாகுமரி மாவட்டம், திக்கணக்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெபலா என்ற இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல், திக்கணங்கோடு கிழக்கு தாராவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராபின்சன். இவரது மகள் ஜெபலா மேரி வயது 26. நர்சிங் படிப்பை முடித்துள்ள ஜெமலாவுக்கும், இனயம்புத்தன்துறையைச் சேர்ந்த நிதின்ராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். நிதின்ராஜ் என்ஜினியரிங் முடித்துள்ளார். ஜெமலாவும், நிதின்ராஜுவும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆரம்பத்தில் இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பெற்றோருடன் போராடி கடந்த ஜனவரி மாதத்தில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துள்ளனர். ஜெபலாவும், நிதின் ராஜும் மேல்மிடாலம் அருகே கூண்டுவாஞ்சேரி பகுதியில் வசித்து வந்துள்ளனர். நிதின் ராஜ் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் விரக்திடயடைந்த ஜெபலா தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில், இச்சம்பவம் குறித்து பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருமணமான ஆறே மாதத்தில் காதல் திருமணம் செய்த பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, ஜெபலாவின் தாய் புஷ்பலதா கூறியுள்ளதாவது: மேரி மடாலயத்தில் நிதின் ராஜ் என்பவருக்கு கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி ஆரோமல் அன்னையில் வைத்து எனது மகளை திருமணம் செய்து கொடுத்தேன். திருமணம் செய்து வைத்ததில் இருந்து எனது மகளுக்கு டார்ச்சர் கொடுத்து வந்தனர். மகள் வேலைக்குச் சென்று வர வேண்டும் என்பதால் வாகனம் வாங்கிக் கொடுத்தேன்.
50 பவுன் நகை, ரூ. 50 லட்சத்தில் சொந்த வீடு, கையில் 6 லட்சம் ரூபாய், பைக் வாங்கி கொடுத்தேன். மீண்டும் பணம் வேண்டும் என்று அவர்கள் கேட்டதால் இப்போது கூட என் தாலியை அடகுவைத்து 5 லட்சம் ரூபாயை எனது மகள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று கொடுத்தேன். ஆனால், இவ்வளவு கொடூரமான பாவிகள் என்று தெரிந்திருந்தால் நான் கொடுத்திருக்கவே மாட்டேன். தினந்தோறும் மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியுள்ளனர்.
நிதின்ராஜின் அக்கா எனது மகளை அடித்து, முகத்தியெல்லாம் பிச்சு அடித்துள்ளனர். இதுகுறித்து நிதின்ராஜ் தகவல் கொடுத்ததும் நான் அங்கு சென்று பார்த்தபோது நிதின்ராஜையும், எனது மகளையும் காணவில்லை. போன் அடித்தால் வீட்டுக்கு வந்துவிட்டேன் என்று கூறினார். அன்று இரவெல்லாம் பட்டி நாயை வீட்டுக்கு கொண்டு வந்திருக்கிறான் என்று எனது மகளை கூறியுள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகை கேட்டு அடித்துள்ளனர். இதுகுறித்து தனது தோழியிடம் என் பெண் கூறியுள்ளார். தினமும் 500 ரூபாய் அவருடைய மாமனார் வாங்கிச் செல்வார். நான் கொடுக்காத சமயங்களில் அவரும் என் மகளை தூக்கிப்போட்டு அடித்துள்ளார். என்று கூறி தாய் கதறி அழுதார்.
மேலும், புஷ்பலதா தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், வரதட்சணைக் கொடுமை அளித்ததாகவும் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள அந்த மனுவில், எனது மகள் ஜெமிலாவுக்கும், நிதின்ராஜுக்கும் ஜனவரியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது ரூ. 6 லட்சம் பணம், 50 பவுன் நகை, வீட்டுக்கு தேவையான பொருட்களை மகளுக்காக கொடுத்தோம்.
ஆனால், திருமணம் முடிந்த 2 மாதத்திலேயே மேலும் 5 லட்சம் ரூபாயை வரதட்சணையாக கேட்டனர். என் மகளை நிதின்ராஜ், மாமனார், மாமியார் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து கொடுமைப்படுத்தி உள்ளனர். என்னிடம் எப்படியாவது பணத்தை கொடுக்குமாறு என் மகள் கூறினார். இதையடுத்து, என் செயினை அடகு வைத்து 5 லட்சம் ரூபாய் கொடுத்தேன். மேல்மிடாலம் பகுதியில் வீடு ஒன்றையும் வாங்கி கொடுத்தோம்.
ஆனாலும், எனது மகளை தொடர்ந்து அடித்துக் கொடுமைப்படுத்தி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் எனது மகளின் கழுத்தில் கயிற்றால் இறுக்கியது போன்ற தடம் உள்ளதால் மகளின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது. மகளின் சாவிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications