இவர் தான் கன்னியாகுமரி தேவயானி.. பறந்து வந்த ராஜகுமாரனை கரம்பிடிக்க.. சுவர் ஏறி குதித்து.. வேறவெலல்
கன்னியாகுமரி: அந்த காலத்தில் ஒரு செய்தி பார்த்திருப்போம். வீட்டின் சுவர் ஏறி குறித்து தேவயானி, ராஜகுமாரனை கரம்பிடித்தார். இன்று கன்னியாகுமரியிலும் ஒரு ராஜகுமாரன் இருந்திருக்கிறார். அவரை கரம் பிடிக்க நள்ளிரவில் வீட்டின் சுவர் ஏறி குறித்து கரம் பிடித்துள்ளார் கன்னியாகுமரி தேவயானி. இந்த ரியல் காதல் கதை குறித்து பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சென்னித்தோட்டம் என்ற கிராமத்தில் வசிப்பவர் தான் ராதிகா. இவருக்கு 21 வயது ஆகிறது. இவர் கருங்கல் பகுதியில் உள்ள கல்லூரில் பிஎஸ்சி படித்து வருகிறார். ராதிகாவின் பக்கத்து ஊரான கரவிளாகத்தில் அனீஷ் என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு வயது 24 ஆகிறது. ராதிகாவும் அனீசும் வேறுவேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.இவர்கள் பள்ளியில் ஒன்றாக படித்த போது காதல் மலர்ந்துள்ளது.

10ம் வகுப்பு முடித்த பின்னர் அனீஷ் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு எலக்ட்ரீசியனாக மாறினார். பின்னர் வெளிநாடு சென்று வேலைபார்த்தார். வெளிநாட்டில் வேலைபார்த்த போதும் அனீஸ் தனது காதலி ராதிகாவுடன் தொடர்ந்து தொலைப்பேசி தனது காதலை வளர்த்து வந்துள்ளார். ராதிகாவும், அனீசும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்த விஷயம் அரசல் புரசலாக வெளியே தெரிந்தது.
மெதுவாக பெற்றோர்களுக்கும் தெரியவந்தது. இந்த காதலை கேள்விப்பட்ட ராதிகாவின் பெற்றோர் கடுமையாக எதிர்த்தனர். மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த அனீஷை கண்டிப்பாக திருமணம் செய்யக்கூடாது என்று எதிர்த்தனர். ஒரு கட்டத்தில் படிக்கவே போக வேண்டாம் என்று, கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே சிறை வைத்தனர்.
சிறை வைத்த கையோடு ராதிகாவிற்கும் மாப்பிள்ளையும் பார்க்க தொடங்கினார்கள். இதனால் பயந்து போன ராதிகா, இனியும் தாமதித்தால் தன்னை காதலனிடம் இருந்து பிரித்து விடுவார்கள் என்று அஞ்சி உடனே காதலன் அனீஷை தொடர்பு கொண்டு நடந்ததை கூறி உள்ளார். மேலும் வெளிநாட்டில் இருந்து உடனே வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார்.
இதையடுத்து ராதிகாவின் கோரிக்கையை ஏற்று கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அனீஷ் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து வீட்டில் சிறை வைத்த காதலியை மீட்டு எங்கு வைத்து திருமணம் செய்வது என நண்பர்களுடன் சேர்ந்து அனீஷ் திட்டமிட்டார். மேலும் காதலியிடமும் செல்போனில் பேசிய அவர் வீட்டை விட்டு எப்படியாவது வெளியே வந்து விடு என்று கூறியுள்ளார். எப்படியாவது வெளியே வந்தால், நாம் திருமணம் செய்து நல்லபடியாக வாழலாம் என்று நம்பிக்கை ஊட்டி உள்ளார்.
இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் கழிவறைக்கு செல்வது போல் பாசாங்கு செய்த ராதிகா, வீட்டு சுற்றுச்சுவர் ஏறி குதித்தார். பிறகு அங்கு தயாராக மோட்டார் சைக்கிளில் நின்ற காதலன் அனீசுடன் தப்பி ஓடிவிட்டார்.
தொடர்ந்து நண்பர்களுடன் சென்ற காதல் ஜோடி கரவிளாகம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே ராதிகாவின் பெற்றோர் தன்னுடைய மகளை அனீஷ் கடத்திச் சென்று விட்டதாக மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தனர்.
இதனை அறிந்த காதல் ஜோடி நேற்று மாலையும், கழுத்துமாக மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் தாங்கள் காதலித்து திருமணம் செய்துள்ளதாக கூறி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம், நாங்கள் ஒருவரை ஒருவர் காதலித்தோம். நாங்கள் சேர்ந்து வாழ விரும்புகிறோம் என்று உறுதியாக கூறினார்கள். இதனை தொடர்ந்து மேஜர் என்பதால் இருவரையும் சேர்ந்து வாழ போலீசார் அனுமதித்தனர். இதனால் பெற்றோர் சோகத்துடன் வீட்டிற்கு திரும்பிச்சென்றார்கள்
கேக் இதற்கிடையே காதலர்கள் இருவரும் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதும் அனீசின் நண்பர்கள் ஏற்கனவே வாங்கி தயாராக வைத்திருந்த காதலர்களின் பெயர் பொறித்த 'கேக்' ஒன்றை எடுத்துவந்தார்கள். அந்த கேக்கை காதலர்கள் ராதிகா அனீஷ் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி தங்கள் காதல் திருமணத்தில் முடிந்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்












Click it and Unblock the Notifications