கன்னியாகுமரி தபால் அதிகாரி குட்நியூஸ்.. ரூ.755ல் ஆரம்பித்து கட்டினால் 15 லட்சம்.. புதிய வசதிகள்
கன்னியாகுமரி: தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் 2018-ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு புதிய வசதிகளை தபால்துறை அறிமுகம் செய்துள்ளது
சாமானிய மக்கள் பலரும் தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கி பணத்தை சேமித்து வருகிறார்கள். தபால்களை அனுப்புவதை தாண்டி, மக்களுக்கு அஞ்சல் நிலையத்தில் வங்கி சேவையையும் தபால்துறை செயல்படுத்தி வருகிறது. செல்வ மகள் சேமிப்பு திட்டம், பொன்மகன் சேமிப்பு திட்டம், தமிழ் புதல்வன், புதுமைப்பெண், பிஎம் கிஷான் உள்பட பல்வேறு வகையான தபால் நிலைய கணக்குகளை மக்கள் ஆரம்பித்து பணம் சேமிக்கிறார்கள். இவர்களுக்காக 'மொபைல் பேங்கிங்' சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது

சேமிப்பு கணக்குகள்
இது தொடர்பாக தபால் துறையின் கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தபால் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் 2018-ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கி உள்ளனர்.
புதுமைப் பெண்
நமது மாநிலத்தில் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை கணக்குகள், விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிசான் கணக்குகள், 100 நாள் வேலை கணக்குகள், கர்ப்பிணிகளுக்கான பி.எம்.எம்.வி.ஒய். கணக்குகள், முதியோர் உதவித்தொகை கணக்குகள் மற்றும் அனைத்து விதமான அரசு மானியம், உதவித்தொகை பெறும் கணக்குகளும் அடங்கும்.
வாரிசு நியமனம்
இதில் ஆரம்ப காலத்தில் தொடங்கப்பட்ட கணிசமான கணக்குகளில் வாரிசு நியமனம் செய்யப்படாமல் உள்ளது. சேமிப்பு கணக்கிற்கு வாரிசு நியமிப்பதன் மூலம், கணக்குதாரர் இறப்பிற்கு பிறகு கணக்கில் உள்ள தொகையை மிக எளிய முறையில் மிக விரைவாக வாரிசுதாரர்கள் பெற முடியும்.
இதன்படி எங்களின் அனைத்து விதமான சேமிப்பு கணக்குகளிலும் வாரிசு நியமனம் செய்யப்பட தேவையான வசதி மாநிலம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் உள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் பிளே ஸ்டோரில் உள்ள ஐ.பி.பி.பி. மொபைல் செயலி மூலம் அவரவரே வாரிசு நியமனம் செய்வது மற்றும் மாற்றம் செய்வது ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மேலும் ஐ.பி.பி.பி. செயலி மற்றும் தபால்காரரின் உதவியுடன் தங்கள் கணக்குகளில் ஆதார் 'சீடிங்' செய்து அரசின் நேரடி மானியங்களையும் எளிமையாக பெறலாம்.
ஆன்லைனில் பணம் செலுத்தலாம்
அதுமட்டுமல்லாமல் உங்களுடைய ஐ.பி.பி.பி. வங்கி கணக்குடன் உங்கள் தபால்நிலைய சேமிப்பு கணக்கை இணைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம். மேலும் ஐ.பி.பி.பி. செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன், தபால்நிலைய ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையாக வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.
பொது காப்பீடு
மேலும் பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து வெறும் ரூ.555, ரூ.755 பீரிமியத்தில் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான தனிநபர் விபத்து காப்பீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் உங்கள் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வியாபாரிகளுக்கு தபால்துறை புதிய வசதி
வியாபார கணக்கு மூலம் வியாபாரிகள் தங்கள் கடைகளில் யு.பி.ஐ. ஸ்டிக்கர் அட்டை மூலம் பணம் பெறும் வசதியும் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தபால் நிலையங்களில் உள்ள பல்வேறு திட்டங்களின் பயன்களை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். விவரங்களுக்கு அருகில் உள்ள தபால்
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications