Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரியில் இவரும் மனிதரா? இன்ஸ்டா நண்பனை காண இரவில் போன பெண்கள்.. மோளம் அடிக்கிற மோகனும் விடல

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: 8ம் வகுப்பு மாணவிக்கு, இன்ஸ்டாவில் ஒருவர் நண்பராகியிருக்கிறார்.. அந்த நண்பனை பார்ப்பதற்காக இரவு நேரம் சைக்கிளில் கிளம்பியிருக்கிறார். அவருடன் துணைக்கு, அவரது தங்கையும் சென்றிருக்கிறார்.. கடைசியில் சகோதரிகளுக்கு நடந்த கதியை பாருங்க.. இது தொடர்பாக 2 பேர் போக்சோவில் கைதாகி உள்ளனர்.. என்ன நடந்தது கன்னியாகுமரியில்?

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் இளம்பெண் ஒருவர்.. இவருக்கு 14 மற்றும் 12 வயதில் மகள்கள் இருக்கிறார்கள். ரப்பர் தோட்டத்தில் கூலித்தொழிலாளியாக இளம்பெண் வேலை பார்த்து வருகிறார்.. சில சமயம் இரவு நேர பணியும் மேற்கொள்வார்.

Kanyakumari Thuckalay insta

நைட் ஷிப்ட் சென்ற பெண்

அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் நைட் ஷிப்ட் சென்றபோது, 2 பெண் குழந்தைகளும், இரவில் ஊர் சுற்றி பார்ப்பதற்காக சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளனர். பிறகு திடீரென வீட்டுக்கு செல்ல வழிதெரியாமல் விழித்த நிலையில், தெருவில் சுற்றித்திரிந்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக வழக்கறிஞர் அஜித்குமார் என்பவர் 2 சிறுமிகளும் விழிப்பதை கண்டு, நைசாக பேச்சு தந்துள்ளார்.. பிறகு, தன்னுடைய அலுவலகத்திற்கும் அழைத்து சென்று, 12 வயது சிறுமியை மட்டும் தனி ரூமில் அடைத்துவிட்டு, 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

தக்கலை பஸ் ஸ்டாண்டு

பிறகு சிறுமிகளையும், தக்கலை பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்து வந்து மிரட்டி, மதுரை செல்லும் பஸ்ஸில் ஏற்றியுள்ளார்.. 2 மகள்களையும் காணாமல், பெற்ற தாய் பதறிப்போய் போலீசில் புகார் தந்ததையடுத்து அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சுங்கான்கடை பகுதியில் சிறுமிகள் 2 பேரும் இளைஞருடன் பைக்கில் இருந்து இறங்கி, டீ குடித்துவிட்டு, மறுபடியும் பைக்கில் ஏறி செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து, இளைஞர் அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, மதுரையில் இறங்கிய 2 சிறுமிகளும், தங்கள் கையில் வைத்திருந்த ஸ்மார்ட்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு, செல்போனை ஆன் செய்துள்ளனர். அப்போது கிடைத்த செல்போன் டவரை வைத்து, சிறுமிகளை போலீசார் மீட்டுள்ளனர்.

இன்ஸ்டா நண்பன்

ஆனால், இந்த சம்பவத்தில் வேறு சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "அந்த மாணவிகளின் அப்பா குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்துவருகிறார். அம்மாவுடன் 2 பெண் குழந்தைகளும் வசித்துவந்துள்ளனர்.. சம்பவத்தன்று வீட்டில் பாட்டி மட்டுமே இருந்துள்ளார்.

அம்மாவும் அன்று இரவு பணிக்கு சென்றுவிட்ட நிலையில், இன்ஸ்டா நண்பனை சந்திப்பதற்காக சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார் 8-ம் வகுப்பு மாணவி.. உடனே அக்காவுக்கு துணையாக தங்கையும் அவருடன் சென்றுள்ளார். தக்கலை பகுதியில் சைக்கிளில் சென்ற சிறுமிகளிடம் எங்கே போகிறீர்கள் என்று வக்கீல் அஜித்குமார் கேட்டார்.

ஃபிரெண்ட் வீட்டுக்கு போவதாக சிறுமிகள் சொல்லி உள்ளனர். அதற்கு அஜித்குமார், "தனியா போறீங்களே? நான் துணைக்கு வரேன்" என்று பாதுகாப்பு தருவதாக சொல்லி, அவர்களை பைக்கில் ஏற்றி தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். செல்லும் வழியில், சிறுமிகளுக்கு ஐஸ்கிரீம், டீ வாங்கி தந்து அழைத்து சென்றுள்ளார்..

தன்னுடைய அலுவலகத்தில், 8-ம் வகுப்பு சிறுமியை பலாத்காரம் செய்திருக்கிறார் வக்கீல் அஜித்குமார். பின்னர் 2 சிறுமிகளையும் நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்துச் சென்று பஸ் ஏற்றி, திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேளம் இசைக்கும் தொழிலாளி

அப்போது, இன்ஸ்டாவில் பழக்கமான அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மேளம் இசைக்கும் தொழிலாளி மோகன் என்பவரை, 2 சிறுமிகளும் பார்ப்பதற்காக சென்றுள்ளனர்..

2 சிறுமிகளை பார்த்ததுமே மோகன், தனியாக வீடு எடுத்துகொடுத்து தங்க வைத்துள்ளார்.. அவரும் 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு பிறகு சிறுமிகள் தங்களது செல்போனில் சார்ஜ் இல்லாமல் நெல்லையில் சுற்றிதிரிந்துள்ளனர்.. அப்போதுதான் அவர்களை போலீஸார் மீட்டுள்ளனர்.. சிறுமிகள் அளித்த தகவலின் அடிப்படையில் வக்கீல் உள்ளிட்ட 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+