கன்னியாகுமரி அருகே கேஸ் சிலிண்டர் குடோனில் கண்ட காட்சி.. முரட்டு சம்பவத்தால் பரபரப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தேரூர் பகுதியில் பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான கேஸ் சிலிண்டர் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தான் சுசீந்திரம் பகுதி மக்களுக்கு குறிப்பிட்ட பொதுத்துறை நிறுவனம் சமையல் கேஸ் சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. நேற்று காலை கேஸ் சிலிண்டர் குடோனில் இருந்த காட்சி அங்கிருந்தவர்களை பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது. ஏனெனில் ஏராளமான சிலிண்டர்களை காணவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தேரூர் பகுதியில் பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான கேஸ் ஏஜென்சி குடோன் உள்ளது. இங்கு ஈசாந்திமங்கலம் பகுதியை சேர்ந்த 46 வயதாகும் கிருஷ்ணபிள்ளை என்பவர் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இந்த குடோனின் உள்ளே ஏராளமான கேஸ் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்படுவது வழக்கம். இங்கிருந்து தான் சுசீந்திரம் பகுதி மக்களுக்கு குறிப்பிட்ட பொதுத்துறை நிறுவனம் சமையல் கேஸ் சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம் ஆகும்.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு பணிமுடிந்ததும் கிருஷ்ணபிள்ளை வழக்கம் போல் கேஸ் குடோனை பூட்டி விட்டு சென்றிருக்கிறார். மறுநாள் காலையில் அந்த வழியாக சிலர் நடந்து சென்ற போது குடோனின் கதவு திறந்த நிலையில் கிடந்ததை கண்டுள்ளனர். இதனை பார்த்த அவர்கள் உடனே பொதுத்துறை நிறுவன கேஸ் ஏஜென்சி மேலாளர் கிருஷ்ணப்பிள்ளைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கிருஷ்ணபிள்ளை சம்பவ இடத்துக்கு பதற்றத்துடன் விரைந்து வந்து பார்வையிட்டார், அப்போது ஏராளமான கேஸ் சிலிண்டர்கள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவில் குடோனின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த 14 கிலோ எடை உடைய 22 கேஸ் சிலிண்டர்கள் மற்றும் 10 கிலோ எடை உடைய ஒரு கேஸ் சிலிண்டரையும் திருடி விட்டு தப்பியதை கண்டுள்ளார் கிருஷ்ணபிள்ளை. இதையடுத்து அவர் இதுகுறித்து சுசீந்திரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார், விரைந்து வந்து கேஸ் குடோனில் விசாரணை நடத்தினர். அப்போது திருட்டு நடந்த குடோனில் இரவு காவலர் இல்லை என்பதும், கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்படவில்லை என்பதையும் கண்டனர். கேஸ் குடோனின் அருகே உள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் மர்ம ஆசாமிகள் உருவம் ஏதேனும் பதிவாகி உள்ளதா? கேஸ் சிலிண்டர்களுடன் வாகனம் ஏதேனும் செல்கிறதா? என காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார். கேஸ் ஏஜென்சி குடோனில் புகுந்து 23 கேஸ் சிலிண்டர்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications