கன்னியாகுமரி டூ சென்னை.. இன்ஸ்டாவில் பழகிய இளைஞரை நம்பி சென்ற கல்யாணமான பெண்.. இறுதியில் ட்விஸ்ட்
கன்னியாகுமரி: இன்றைக்கு இன்ஸ்டாகிராம் மோகம் பலருக்கும் அதிகம்..காலையில் எழுந்து கண் விழித்தால் ஸ்மார்ட் போனைத்தான் தேடுகிறார்கள். அவர்கள் ஸ்மார்ட்போனில் போய் பார்ப்பது இன்ஸ்டாகிராம் தான். ஒரு காலத்தில் பேஸ்புக் இருந்தது. இப்போது இன்ஸ்டாகிராம் இருக்கிறது. இன்ஸ்டாவில் பழகும் நபர்களை நம்பி வாழ்க்கையை தொலைப்பதும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்ஸ்டாவில் பழகிய இளைஞரை நம்பி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சென்ற பெண், தன்னை காப்பாற்றும்படி தங்கையிடம் செல்போனில் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்ஸ்டாகிராமில் யார் என்றே தெரியாத நபர்களின் கவர்ச்சிகரமான வார்த்தைகளை நம்பி, அவர்களை காதலிப்பது இன்றைக்கு அதிகமாகவிட்டது. அதில் 15 வயது முதல் 25 வயது உள்ள பெண்கள், ஏமாறுவது அதிகமாக இருக்கிறது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு படிக்கும் இளம் சிறுமிகள், காதல் என்ற பெயரில் சுற்றுவது,இன்ஸ்டாவில் காதல் வலையில் சிக்கி, அவர்களின் காமத்திற்கு விருந்தாகி விடுகிறார்கள்.

இறுதியாக வாழ்க்கையை தொலைப்பது அதிகமாக நடக்கிறது. இந்த தவறுகளை இளம் சிறுமிகள் மட்டுமல்ல , இளம் பெண்களுமே செய்கிறார்கள். நம்பிக்கையாக பேசும் நபர்கள், ஆசை வார்த்தைகள் பேசும் நபர்கள், பணம் அதிகம் இருப்பது போல் காட்டி, கோடீஸ்வரனாக காட்டி ஏமாற்றுபவர்கள் இவர்கள நம்பி ஏமாறுவது அதிகமாக உள்ளது. இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபரை நம்பி கன்னிகுமரியில் இருந்து சென்னைக்கு சென்ற இளம்பெண் பற்றி பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள காட்டாத்துறையை சேர்ந்த ஒரு பெண் கணவரை இழந்த நிலையில் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் 23 வயதுடைய மூத்த மகளை வாத்தியார்விளையை சேர்ந்த ஒரு வாலிபருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்
ஆனால் அந்த இளம் பெண் குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்து மாமியாருடன் வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் இளம்பெண்ணுக்கும், சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அடிக்கடி செல்போனில் அதிக நேரம் பேசி வந்தாராம். இதனை இளம் பெண்ணின் தாயார் மற்றும் குடும்பத்தினர் கண்டித்தனர்.
இந்தநிலையில் திருமணமான இளம்பெண் கடந்த 8-ந் தேதி சென்னை செல்வதாக கூறி சென்றார். மறுநாள் தனது தங்கைக்கு போன் செய்து தன்னை காப்பாற்ற வேண்டும் என கூறி கதறி அழுதாராம். அதன்பின்பு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அந்த இளம்பெண்ணுக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நினைத்து தாயார் நேசமணி போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இளம்பெண் செல்போனில் காப்பாற்ற வேண்டும் என பேசியிருப்பதால் அவரை மர்மநபர்கள் கடத்தினார்களா? அல்லது அவருக்கு வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் பழகிய இளைஞரை நம்பி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சென்ற இளம்பெண்ணின் கதி என்னவென்று தெரியாததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதுபோன்ற செய்திகளில் இருந்து இளம் சிறுமிகள் பாடம் கற்க வேண்டும். இதுபோன்ற காதல் வலையில் விழுந்து ஏமாறக்கூடாது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications