கன்னியாகுமரி காதலி பேசாததால்.. காதலன் செய்த முட்டாள்தனம்.. எந்த தாயும் பார்க்கக்கூடாத கோலம்
கன்னியாகுமரி: காதலிக்கும் போது உலகமே காதலி அல்லது காதலன் என்பதாகவே இருக்கும் என்பார்கள்.. அதனை உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் சில காதலர்கள் முட்டாள்தனங்களை அடிக்கடி செய்துள்ளார்கள். உலகம் என்பதே வேறு.. ஆனால் காதலி தான் உலகம்.. காதலன் தான் உலகம் என்று கண் மூடித்தனமாக நம்பி வாழ்க்கையை தொலைக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே காதலி பேசாததால் என்ஜினியர் அப்படியான ஒரு முட்டாள்தனமான முடிவினை எடுத்துள்ளார்.
காதலில் தோல்வி, காதலி பேசவில்லை என்றால் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு, உலகமே அவர்கள் தான், அவர்களை பிரிந்து வாழ முடியாது என்று முட்டாள் தனங்களை செய்யவே கூடாது..அதேபோல் அந்த பெண் பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்தால் அல்லது காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தால், அதனை எதிர்த்து போராடுவதில் தவறு இல்லை..

அதற்காக தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக் கொள்வது போன்ற முட்டாள்தனங்களை ஒருபோதும் செய்யவே கூடாது. அதேபோல் வேண்டாம் என்று பிரிந்து செல்லும் காதலிக்கு எதிரான வன்மமும் கூடாது. ஆனால் நடைமுறையில் பல முட்டாள்தனங்கள் அரங்கேறுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள வன்னியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி. இவருடைய மகன் அபீஷ்க்கு 28 வயது ஆகிறது. என்ஜினியரான இவர் முன்னாள் விளவங்கோடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவராகவும் இருந்து வந்திருக்கிறார். இவர் தனது வீட்டின் அருகில் இருசக்கர வாகன வாட்டர் சர்வீஸ் நிலையம் நடத்தி வந்துள்ளார்.
அபீஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளாராம். அவர்களுக்கு இடையே அண்மையில் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காதலி, அபீஷிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளாராம். இதனால் அபீஷ் மனமுடைந்தார். காதலி பேசாத ஒவ்வொரு நிமிடமும் அவரை ஆழ்ந்த கவலையில் தள்ளியதாம்.
கடந்த பிப்ரவரி 12ம் தேதி மாலையில் தாயாரிடம் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்த அபீஷ், திடீரென தனது அறைக்குச் சென்று கதவைப் பூட்டினாராம். இதனால் சந்தேகமடைந்த தாயார், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அபீஷ் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டிருக்கிறார். அதிர்ச்சி அடைந்த தாயார் கதறி அழுதபடி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று அபீஷை மீட்டார்கள்
பிறகு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அபீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி பேசாததால் என்ஜினீயர் தூக்கில் தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications