கன்னியாகுமரி இளைஞர் மதுவுக்கு அடிமை.. திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இப்படியும் செய்வார்களா?
கன்னியாகுமரி: கடந்த ஜனவரி 25-ந்தேதி திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர், கொல்லம் செல்வதற்காக காத்திருந்தார். அவர் தனது கை பையில் 5 லட்சம் மதிப்புள்ள நகைகளை வைத்திருந்தார். இந்நிலையில் மதுவிற்கு அடிமையான கன்னியாகுமரி இளைஞர், திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் பயணியிடம் நகை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கேரளாவில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் மிகவும் முக்கியமான ரயில் நிலையம் ஆகும். இங்கு ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். கடந்த ஜனவரி 25-ந்தேதி திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். கொல்லம் செல்வதற்காக ரயிலி ஏறக் காத்திருந்தார். அவரது கையில் இருந்த பையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகைகளை வைத்திருந்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி , கண் இமைக்கும் நேரத்தில் அந்த பெண்ணிடம் இருந்த கை பையை திருடி விட்டு தப்பிச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது பற்றி ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து ரயில்வே குற்றப்பிரிவு சிறப்பு போலீசாரும், நிலைய ரயில்வே போலீசாரும் அங்கு பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் பதிவாகி இருந்த மர்ம நபரை தீவிரமாக தேடினார்கள். இதுபற்றி அண்டை மாநிலமான தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்ட போலீசிடம் போலீசார் கூறியிருந்தார்கள்.
இந்த நிலையில் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து கை பையுடன் வெளியேறிய நபர், கடந்த 2 தினங்களுக்கு முன் தம்பானூர் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும் படியாக சுற்றி வருவது தெரியவந்தது. ரயில்வே குற்றப்பிரிவு சிறப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த ஆசாமியை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் அவர், குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்த சியாம் கிறிஸ்பின்(வயது 42) என்பதும், சம்பவத்தன்று ரயில் நிலையத்தில் பெண்ணிடம் இருந்த கை பையை திருடியதும், அதில் இருந்த நகைகளை நெடுமங்காடு வாண்டா பகுதியில் உள்ள ஒரு அரிசி ஆலை அருகே மறைத்து வைத்து இருப்பதாக கூறியிருக்கிறார். உடனே போலீசார் அங்கு சென்று, புதைத்து வைத்து இருந்த நகைகளை மீட்டனர். அதைத்தொடர்ந்து போலீசார் சியாம் கிறிஸ்பினை கைது செய்து திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுபற்றி திருவனந்தபுரம் போலீசார் கூறும் போது, சியாம் கிறிஸ்பின் மதுவுக்கு அடிமையானவர் , வேலைக்கு செல்லாததால் மது குடிப்பதற்காக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் வேறு சம்பவங்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
-
Gold Price Today: தங்கம் விலை மளமளவென சரிந்தது.. 2வது நாளாக இன்றும் குறைந்தது.. நகை பிரியர்கள் குஷி! -
தங்கம் விலை தொடர் உயர்வா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. கெவின் வார்ஷ் முடிவில் தான் எல்லாமே இருக்கு! -
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications