கேரளாவில் பிரபல ஜவுளிக்கடையில் உரிமையாளர்- பெண் மேலாளர் இருந்த கோலம்.. ஆடிப்போன ஊழியர்கள்
கன்னியாகுமரி: கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அலி என்பவர் கொல்லம் மாவட்டம் ஆயூரில் துணிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருடைய கடையில் திவ்யா என்ற பெண் மேலாளராக பணியாற்றி வந்தார்கள். இவர்களது கடையில் ஏராளமான பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். நேற்று காலை கடையை வழக்கம் போல் திறந்த பணியாளர்கள் கண்ட காட்சி, ஆடிப்போக வைத்துள்ளது. மேலாளரும், ஜவுளிக்கடை ஓனரும் இருந்த நிலையை கேட்டு போலீசாரே நேரில் வந்தனர்.
தொழிலில் நஷ்டமா அல்லது வேறு காரணமா என்று தெரியவில்லை.. கொல்லம் மாவட்டம் ஆயுரில் உள்ள துணிக்கடையில் ஜவுளிக்கடை அதிபரும், மேலாளரும் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 38 வயதாகும் அலி என்பவர் கொல்லம் மாவட்டம் ஆயூரில் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருடைய ஜவுளிக் கடையில் பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த 38 வயதாகும் திவ்யாமோள் மேலாளராக வேலை பார்த்தார். இந்தநிலையில் கடந்த 17ம் தேதி இரவு வழக்கம்போல் மற்ற ஊழியர்கள் கடையை அடைத்த பிறகு அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர். ஆனால் ஜவுளிக்கடை மேலாளர் திவ்யா மோள் மட்டும் வீட்டிற்கு போகவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் வழக்கமாக அலி மற்றும் திவ்யாமோள் ஆகிய இருவரும் துணிகளை மொத்தமாக கொள்முதல் செய்ய சேர்ந்து பெங்களூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்றுவிட்டதாக கருதப்பட்டது. ஓணம் விற்பனைக்காக இருவரும் துணிகளை கொள்முதல் செய்ய வெளியூர் சென்றிருக்கலாம் என்று வீட்டில் உள்ளவர்களும் நினைத்துக் கொண்டனர்.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் கடைக்கு ஜவுளிக்கடை ஊழியர்கள் வேலைக்கு வந்தனர். ஆனால் கடை திறக்கப்படவில்லை. மாறாக கடை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அங்கு துணிக்கடையின் உரிமையாளர் அலியும், மேலாளர் திவ்யாமோளும் கடைக்குள் வாழ்க்கையை முடித்துக் கொண்டு தொங்கி கொண்டிருந்தனர். இதையடுத்து இருவரது உடல்களை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அலிக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இதேபோல் திவ்யாமோளுக்கும் திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications