kumari: குமரி இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. மாமியார் செய்த செயல்.. கல்யாணம் ஆன 2 வருஷத்திலேயே இப்படியா ஆகனும்
குமரி: 25 வயதே ஆன இளம்பெண் சிந்து எடுத்த விபரீத முடிவு குமரி மாவட்டத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மத்திய போலீஸ் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வரும் இவரது கணவர் மற்றும் தாய் செய்த கொடுமையின் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக சிந்துவின் தந்தை கண்ணீர் மல்க போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதன்பேரில் சிந்துவின் கணவர், மாமியார் உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் அனில். இவர் மத்திய போலீஸ் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிந்து (வயது 25). அனில் சிந்து தம்பதிக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.

மாமியார் கொடுமை தான் காரணம்
கணவர் அனில் உடன் அவரது தாய் கலா மற்றும் சகோதரர் அனு வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி வீட்டில் இருந்த சிந்து திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனையில் அவர் விஷம் குடித்தது தெரியவந்தது. இதையடுத்து சிந்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சிந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குமரி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மகள் விஷம் குடித்து உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத அவரது தந்தை சுரேஷ் குமார் இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவித்தார். அந்த புகாரில் மாமியார் கொடுமையால் தான் எனது மகள் விஷம் குடித்து உயிரிழந்ததாக கூறியிருந்தார்.
மாமியார், கணவர் உள்பட 3 பேர் கைது
அவர் போலீசில் கொடுத்த மனுவில், எனது மகள் சிந்துவுக்கும், அனிலுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு அவரது மாமியார் கலா மற்றும் கணவர் அனிலின் சகோதரர் அனு ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால், கடும் மன உளைச்சலில் இருந்து வந்த எனது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். எனவே என் மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் சிந்துவின் கணவர் அனில், அவரது தாயார் கலா, அனிலின் சகோதரர் அனு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட சிந்துவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் தான் ஆவதால் பத்மநாபபுரம் ஆர்டிஓ இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தற்கொலை தீர்வு அல்ல
சமீப நாட்களாகவே திருமணம் ஆன பெண்கள் வரதட்சணை கொடுமை, மாமியார் கொடுமை காரணமாக தற்கொலை செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எந்த வித சம்பவத்துக்கும் தற்கொலை தீர்வு அல்ல என்று போலீசார் விழிப்புணர்வு செய்தாலும் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
நீங்கள் இப்போது எதை எதிர்கொண்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதற்கு நிரந்தரமான தீர்வுகள் இருக்கின்றன. வாழ்க்கையில் இழப்பு வரும் நேரங்கள் சகஜம். ஆனால் அந்த நேரங்களை கடந்துவிட முடியும். உதவி கேட்பது தவறு அல்ல.
உங்களுக்கு அல்லது உங்களது அறிமுகத்தில் உள்ள ஒருவருக்கு மனஅழுத்தம், உளவியல் பிரச்சனைகள், அல்லது தற்கொலை எண்ணங்கள் வந்தால், தயங்காமல் நம்பிக்கையுடன் ஒரு நபரை அணுகுங்கள்.. தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications