வெளியில் "மசாஜ்".. உள்ளே போய் பார்த்தால் "கசமுசா".. எகிறி தாவி ஓடிய 2 ஆண்கள்.. சிக்கிய பெண்கள்!
மசாஜ் சென்டரில் விபச்சாரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
கன்னியாகுமரி: வெளியே பார்த்தால் மசாஜ் சென்டர்.. உள்ளே நுழைந்தால் விபச்சாரம் என கசமுசா பிசினஸை நடத்தி வந்திருக்கிறார்கள்.. போலீசாரை பார்த்ததும், மசாஜ் சென்டரில் இருந்து 2 ஆண்கள் எகிறி குதித்து பின்பக்கமாக ஓடிய சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை தந்துள்ளது.. இது சம்பந்தமாக பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது.. பொதுமக்கள் பலர் வேலையில்லாமல் உள்ளனர்.. யார் கையிலும் காசு இல்லை.. தொற்று ஒரு பக்கம் வேகமாக பரவி வருகிறது.

இதனிடையே கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகளையும் அரசு அறிவித்து, அது தற்போது நடைமுறையிலும் உள்ளது.. அத்தியாவசிய தேவைகளுக்காக இப்படி தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டால், ஒரு மசாஜ் சென்டரையும் திறந்து வைத்து கொண்டு வியாபாரம் பார்த்து வருவது ஆங்காங்கே நடந்து வருகிறது. இவர்களை போலீசார் கண்காணித்து கைது செய்தும் வருகின்றனர்.
அப்படித்தான் ஒரு கும்பல் இப்போது சிக்கி உள்ளது. கன்னியாகுமரியில் நிறைய மசாஜ் செண்டர்கள் இயங்கி வருகின்றன... இதற்கு காரணம், வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.. இவர்களை காரணம் காட்டியே மசாஜ் சென்டர்களுக்கு அனுமதியும் வாங்கி வைத்து கொள்கின்றனர்.
அப்படி ஒரு சென்டர் தெற்குகுண்டல் பகுதியில் பிஸ்மி நகரில் இயங்கி வருகிறது.. அந்த மசாஜ் சென்டர் பெயர் "பிளாக் மூன்".. ஹோட்டல்களும், லாட்ஜுகளுக்குமே இங்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த மசாஜ் சென்டரை திறந்து வைத்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, இங்குதான் பலான விஷயங்கள் உள்ளே நடப்பதாகவும் போலீசாருக்கு விஷயம் பறந்தது.
தொடர் புகார்கள் இந்த சென்டர் மீது வரவும், அதிரடியாக அங்கு விரைந்து சென்றது போலீஸ்.. பிளாக் மூன் மசாஜ் சென்டருக்குள் சோதனையும் நடந்தது.. விசாரணையும் நடந்தது.. விபச்சாரம் செய்து வருவதும் உறுதியானது.. அங்கு ஒரு பெண் இருந்தார்.. அவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இப்படி திடுதிப்பென்று போலீஸ் உள்ளே வரவும், அந்த மசாஜ் சென்டரிலிருந்து பின்பக்கம் 2 ஆண்கள் எகிறி குதித்து தப்பி ஓடினர்.. அவர்களை துரத்தி சென்று பிடிக்க முயன்றும், தப்பிவிட்டார்கள். கடைசியில் 2 பேரை மட்டும் கைதுசெய்து விசாரித்தபோது, அந்த பெண் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications