1900 உல்லாச படங்கள், 400 ஆபாச வீடியோக்கள்.. நாகர்கோவில் காசியிடம் துருவி துருவி விசாரணை
நாகர்கோவில் காசியிடம் இன்று மகிளா கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டது
நாகர்கோவில்: நாகர்கோவில் காசி மற்றும் அவரது அப்பாவை போலீசார் இன்று மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்க பாண்டியன்... இவரது மகன் காசி.. 27 வயதாகிறது..
இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் என்ஜீனியர் மற்றும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளம்பெண் பாலியல் புகார் அளித்தனர்.

காசி
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காசியை கைது செய்து விசாரணை நடத்தினர்.. அந்த விசாரணையில், ஏராளமான பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு காசி மிரட்டியது உறுதியானது.. இதனை தொடர்ந்து காசி மீது நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் குமரி மாவட்ட சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டன.

லேப்டாப்பில் என்ன?
இந்த வழக்கில் காசியின் நண்பர்களான 2 பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது... இதில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே காசிக்கு உதவும் வகையில் பல்வேறு சாட்சியங்களை அழித்ததாக அவரது தந்தை தங்கபாண்டியனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் காசி மற்றும் அவரது தந்தை தங்க பாண்டியன் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். காசியின் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றில் இருந்த ஆபாச படங்கள் அழிக்கப்பட்டுள்ளதால் சைபர் க்ரைம் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்...

லேப்டாப்
லேப்டாப்பை யார் அழித்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், காசியின் தந்தையான தங்கபாண்டியன் இந்த செயலை செய்திருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.. இவர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.. கந்துவட்டி, போக்சோ உள்பட 6 வழக்குகளுக்கு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 2 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் மும்முரமாகி வருகிறார்கள்.

இளம்பெண்
இந்த நிலையில், இளம்பெண் அளித்த பாலியல் புகார் மீதான விசாரணை கடந்த 18-ந் தேதி முதல் நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடத்து வந்தது... விசாரணையில் காசி மற்றும் தந்தை தங்கபாண்டியன் ஆஜரானார்கள்.. இன்றும் 4-வது நாளாக காசி மற்றும் தங்கபாண்டியனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்... அப்போது முக்கிய சாட்சியான இளம்பெண்ணிடம் நீதிபதி சசிரேகா விசாரணை நடத்தினார்...

வாக்குமூலம்
இந்த 4 நாட்களில் மட்டும் இதுவரை 10-க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் நேரில் வந்து வாக்குமூலம் அளித்துள்ளனர். இதற்கு பிறகு, காசி மற்றும் தங்கபாண்டியனிடம் விசாரணை நடத்தப்பட்டது... விசாரணை முடிந்ததும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காசி மற்றும் தங்க பாண்டியன் மீண்டும் பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்... அனைத்து வாக்குமூலங்களையும், விவரங்களையும், போலீசார் ரகசியமாக, பாதுகாப்பாக வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications