"போலீஸ்காரங்க அராஜகம் பண்றாங்க.. சாத்தான்குளம் மாதிரியே பண்ணிடுவோம்னு.." காசியின் தங்கை பரபர புகார்

நாகர்கோவில் காசியின் தங்கை கோரிக்கை விடுத்து பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: "இந்த போலீஸ்காரங்க அராஜகம் பண்றாங்க.. என் அண்ணனுடைய கேஸ் சம்பந்தமாக அப்பாவை அரெஸ்ட் பண்ணி வெச்சிருக்காங்க.. என் அம்மாவை தள்ளிவிட்டுட்டாங்க.. இப்போ அவங்க ஐசியூவில் இருக்காங்க.. இதை பத்தி கேட்டதுக்கு, "சாத்தான்குளம் மாதிரி உங்க குடும்பத்தையும் பண்ணிடுவோம்"ன்னு எங்களை மிரட்டறாங்க.. இப்படி டார்ச்சர் பண்ணீங்கன்னா நாங்க தற்கொலைதான் செய்துப்போம்" என்று நாகர்கோவில் காசியின் தங்கை கண்ணீர் மல்க கோரிக்கையுடன் ஒரு பேட்டி தந்துள்ளார்.

26 வயசு நாகர்கோவில் காசி என்பவர் பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள் எடுத்து.. லட்சக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.

இதைதவிர, கந்துவட்டி, பாலியல் பலாத்காரம், போக்சோ, நிலஆக்கிரமிப்பு இப்படி என 6 கேஸ்கள் இதுவரை காசி மீது பதிவாகி உள்ளது.. குண்டர் சட்டத்திலும் இவர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளார்.

பணமோசடி

பணமோசடி

காசி மீதான கந்து வட்டி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், பணமோசடி செய்த வழக்கில் தடயங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியன் கைதாகி உள்ளார். கைது செய்யப்பட்ட தங்க பாண்டியனிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதாரங்கள்

ஆதாரங்கள்

ஏற்கனவே காசியின் வீட்டில் மெமரிகார்டுகள், செல்போன்கள், லேட்டாப்கள் கைப்பற்றப்பட்டன.. அவைகளை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தும் வந்தனர்.. அப்போதுதான் ஏராளமான ஆதாரங்களை தங்கபாண்டியன் அழித்துள்ளது தெரிய வந்தது.. மேலும் மகனை காப்பாற்றவே இப்படி எல்லாவற்றையும் அழித்து வைத்ததும் தெரியவந்தது.

வீடியோ

வீடியோ

இப்போது அதிரடி திருப்பமாக காசியின் தங்கை ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. காசியின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை போலும்.. அதனால் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.. பிறகு ஆஸ்பத்திரி வளாகத்திலேயே காசியினி தங்கை பேட்டி தந்துள்ளார்.. அதில் அவர் கண்ணீர் மல்க சொன்னதாவது:

தனிமை

தனிமை

"நான் தங்கபாண்டியன் பொண்ணு... இந்த போலீஸ்காரங்க அராஜகம் பண்றாங்க.. என் அண்ணனுடைய கேஸ் சம்பந்தமாக அப்பாவை அரெஸ்ட் பண்ணி வெச்சிருக்காங்க.. 2 நாளா அப்பாவுக்கு சளி இருந்தது.. அதனால நாங்க அவரை தனிமையில் வெச்சிருந்தோம்.. அவர் தனிமையில் இருக்கிறார் என்று தெரிஞ்சும், 2 போலீஸ்காரங்க, 2 பொம்பளைங்க கையில் துப்பாக்கியோட வந்தாங்க.

சுயநினைவு

சுயநினைவு

அதிரடியா எல்லாரும் வீட்டுக்குள்ள நுழைஞ்சாங்க.. அப்போ நாங்க சொன்னோம், அவருக்கு உடம்பு சரியில்லைன்னு, ஆனாலும் அதை காதிலேயே வாங்காமல், தரதரன்னு இழுத்துட்டு வந்தாங்க.. ஏன் இப்படி பண்றீங்கன்னு கேட்டதுக்கு என் அம்மாவை தள்ளிவிட்டுட்டாங்க.. இப்போ அம்மா சுயநினைவு இல்லாம ஐசியூவில் இருக்காங்க.

சாத்தான்குளம்

சாத்தான்குளம்

எங்க எல்லாரையும் ஒரு இடத்துல உட்கார வெச்சாங்க.. தனி ரூம்ல அவங்களே போய் ஒரு செக் வெச்சிட்டு வந்து, அதை என் அப்பாவை விட்டு எடுக்க சொன்னாங்க.. எங்களுக்கு அது என்னன்னே தெரியாது.. ஆனா எங்ககிட்ட இருந்து எடுத்த மாதிரி போட்டோ எடுத்து சாட்சி ரெடி பண்ணிட்டாங்க.. ஏன் இப்படி பண்றீங்கன்னு கேட்டதுக்கு, சாத்தான்குளம் கேஸ் மாதிரி உங்களையும் பண்ணிடுவோம்னு மிரட்டினாங்க.

சித்ரவதை

சித்ரவதை

எங்க குடும்பத்துக்கு உயிர் பாதுகாப்பு இல்லை.. என் அப்பா உயிருக்கு இந்த அரசுதான் உத்தரவாதம் தரணும்.. எங்க மேல ஏதாவது தப்பு இருந்தால், அதை கோர்ட்டுல சந்திக்கிறதை விட்டுட்டு, தயவுசெய்து என் அப்பாவை சித்ரவதை பண்ணாதீங்க.. சாத்தான்குளத்துல நடந்தது மாதிரி நிலைமை நடக்கும்னு எங்ககிட்டயே சொல்லிட்டு போயிருக்காங்க.. இப்படி டார்ச்சர் பண்ணீங்கன்னா நாங்க தற்கொலைதான் செய்துப்போம்" என்று கதறி அழுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+