"சீரழிச்சிட்டான்.. படுபாவி.. நம்பி ஏமாந்துட்டேன்".. அடுத்த கட்டத்துக்கு நகரும் காசி வழக்கு..!
நாகர்கோவில் காசி மீது 3வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
குமரி: "உருகி உருகி காதலிச்சு ஏமாத்திட்டான்.. என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டினான்" என்று இளம்பெண் ஒருவர் காசி மீது அளித்த புகாரின் பேரில் மற்றொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் காசி, தன்னுடைய கட்டுமஸ்தான உடலை காட்டியே பல இளம் பெண்களை அழித்தவர்.. நாசம் செய்தவர்.. மோசடி செய்து பணம் கறந்தவர்.. இது சம்பந்தமான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இப்போது காசி கைதாகி ஜெயிலில்தான் உள்ளார். இவர் மீது கந்துவட்டி, பாலியல் பலாத்காரம், போக்சோ, நிலஆக்கிரமிப்பு இப்படி என பல கேஸ்கள் இதுவரை காசி மீது பதிவாகி உள்ளது.. குண்டர் சட்டத்திலும் கைதாகி உள்ளார்.

கன்னியாகுமரி
காசியின் லீலைகள் சிறுமிகள் முதல் குடும்ப பெண்கள் வரை தொடர்ந்துள்ளது.. தன்னுடைய காரில் வைத்து நெருக்கமாக இருந்திருக்கிறார்.. காசி விவகாரத்தை முதன்முதலில் அம்பலப்படுத்தியதே சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர்தான்., அவரை ஏமாற்ற போய், பிறகு பல அப்பாவி பெண்களும் இதில் சிக்கி கொண்டுள்ளது தெரியவந்தது.. காசியின் லேப்டாப்பில் அதற்கான ஆதாரங்களும் இருந்தன..

வீடியோ ஆதாரங்கள்
தொழிலதிபர்களின் மனைவிகள், விஐபிக்களின் மனைவிகள் என யாரையுமே இந்த காசி விட்டு வைக்கவில்லை. அவர்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ ஆதாரங்களும் சிக்கி உள்ளதாக கூறப்பட்டது. எப்படியும் 80-க்கும் மேற்பட்ட பெண்களை காசி ஏமாற்றியிருக்கலாம் என்கிறார்கள் போலீசார்... விஐபிகள் சிலரின் மனைவி உட்பட, பலர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பல போலீஸ் ஸ்டேஷன்களில் காசிக்கு எதிராக பலரும் புகார்களை அளித்திருந்தனர்.

கந்துவட்டி
முதலில் காசி மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன... இந்த வழக்கில் ஏற்கனவே கந்துவட்டி, ஆபாசப் படம் எடுத்து மிரட்டியது தொடர்பாக இரு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன... மேலும் 5 வழக்குகளின் ஆதாரங்களை சிபிசிஐடி போலீஸார் திரட்டி வந்தனர்... இந்நிலையில், நாகர்கோவிலை சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியரையும் நாசம் செய்துள்ளாராம் காசி..

வன்கொடுமை
அவரை காதலிப்பது போல நடித்து வன்கொடுமை செய்ததாக பதிவான புகாரின் அடிப்படையில், காசி மீது 3-வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. அந்த புகாரில், காசி தன்னை உருகி உருகி காதலித்ததாகவும், அதை பார்த்துதான் ஏமாந்து போய்விட்டதாகவும், பிறகு தன்னை ஆபாசம் வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் அந்த பெண் புகாரில் கூறியிருந்தார்.

குற்றப்பத்திரிகை
முதலில், 400 பக்க அளவிலான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.. அதில், காசி, கொஞ்சம்கூட மனசாட்சி இன்றி, பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகவும், அவர்களிடம் மிருகத்தனமாக காசி நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2-வதாக, கந்துவட்டி வழக்கில் காசிக்கு எதிராக மற்றொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது... இப்போது 3வது முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்த குற்றப்பத்திரிகைகள் தாக்கலாகி உள்ள நிலையில், காசி வழக்கு இனி வெடித்து கிளம்பும் என்றும், அவரிடம் சிக்கியவர்கள் யார் யார் என்றும் இனிதான் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications