பாவ மன்னிப்பு கேட்ட பெண்கள்.. பாவம் செய்த பாதிரியார்! கன்னியாகுமரி ஆண்டோவுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
கன்னியாகுமரி: தேவாலயத்துக்கு வரும் பெண்கள், கல்லூரி மாணவிகளை மயக்கி ஆபாசமாக வீடியோகால் பேசி அதை பணம் கேட்டு மிரட்டிய பாதிரியார் பெனெடிக் ஆண்டோவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நீதிமன்றம் அவரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்து உள்ளது.
கன்னியாகுமரியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தவர் பெனெடிக் ஆண்டோ. கடந்த மாதம் அவரை மர்ம நபர்கள் தாக்கிவிட்டு அவரது லேப்டாப்பை திருடிவிட்டு சென்றனர். இந்த நிலையில் அந்த பாதிரியார் பல பெண்களுடன் இருக்கும் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

திருடப்பட்ட லேப்டாப்பில் இருந்த வீடியோக்களும், புகைப்படங்களுமே சமூக வலைதளங்களில் கசியவிடப்பட்டது தெரியவந்தது. தேவாலயத்திற்கு பாவ மன்னிப்பு கேட்டு வரும் பெண்களுடன் அன்பாக பேசி அவர்களின் செல்போன் எண்களை வாங்கிய பாதிரியார் ஆண்டோ அவர்களிடம் தொடர்ந்து பேசி தன்வசப்படுத்தி இருக்கிறார். அதன் பின்னர் அவர்களிடம் வாட்ஸ் ஆப் மூலமாக பேசத் தொடங்கிய பாதிரியார், பெண்களிடம் அடுத்தடுத்த நாட்களில் ஆபாசமாக பேச தொடங்கி இருக்கிறார்.

ஆபாச வீடியோக்கள்: அதனை தொடர்ந்து வீடியோ கால் மூலமாக பெண்களிடம் பேசியுள்ளார் பெனெடிக் ஆண்டோ. இவர் பெரும்பாலும் பேசிய கல்லூரி மாணவிகள்தான் என்கிறார்கள். அவரது பேச்சில் மயங்கி சில பெண்களிடம் பாதிரியார் ஆண்டோ நிர்வாணமாக வீடியோ கால் பேசி அதை ரெக்கார்ட் செய்தும் வைத்து உள்ளார். அதேபோல் பெண்களிடம் பாதிரியார் நேரிலும் தவறாக நடந்துகொண்டதாகவும், ரகசியமாக பதிவு செய்து வைத்த ஆபாச வீடியோக்களை காட்டி பணம் கேட்பதாகவும் புகார்கள் எழுந்தன.
பாலியல் புகார்: இதனால் அஞ்சிய பெண்கள் பணத்தை கொடுத்தும் ஏமாற்றப்பட்டு உள்ளதாக புகார்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து தங்களின் விபரங்களை வழங்க வேண்டும் எனவும் அவர்களின் ரகசியத்தை காப்பதாகவும் போலீசார் அறிவுறுத்தினர். இந்த நிலையில்தான், இந்த நிலையில்தான் பாதிரியார் பென்னடிக் ஆண்டோ மீது நர்சிங் மாணவி ஒருவர் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். 18 வயதான நர்சிங் கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோ மீது நாகர்கோயில் சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

ஒருநாள் போலீஸ் காவல்: இந்த நிலையில் வீடியோக்கள் கசிந்ததால் தலைமறைவான பாதிரியாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 5 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், கன்னியாகுமரியை சேர்ந்த மேலும் ஒரு பெண் புகாரளித்து இருந்தார். இந்த நிலையில் இன்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த நீதிபதி உத்தரவிட்டார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications