10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயங்கும் புதிய கடைகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
கன்னியாகுமரி: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில், 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள, புதிதாக துவங்கப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பதிவிற்கான விண்ணப்பத்தை https://labour.tn.gov.in என்ற இணையவழி முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு பதிவு கட்டணமின்றி இணையவழி முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில், 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள, புதிதாக துவங்கப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பதிவிற்கான விண்ணப்பத்தை https://labour.tn.gov.in என்ற இணையவழி முகவரியில் படிவம் Y-ல் (வை) பதிவுக்கட்டணம் ரூ.100 செலுத்தி ஆறு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் இது பொதுவான நடைமுறையாகும்.

விண்ணப்பம் பெறப்பட்ட, 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட ஆய்வாளரால் பதிவுச் சான்றிதழ் படிவம் Z-ல்(இசட்) இணையவழி தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.அவ்வாறு, 24 மணி நேரத்திற்குள் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படாவிட்டால், பதிவு தானாக அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும்.
இதுபற்றி நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) மணிகண்டபிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகள், 2024 ஜூலை 2-ந் தேதிக்கு பிறகு புதிதாக தொடங்கப்பட்ட கடைகள், நிறுவனங்களில் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்துள்ள உரிமையாளர்கள் தொழிலாளர் துறையின் http://labour.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவுக் கட்டணம் ரூ.100 செலுத்தி 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட ஆய்வாளரால் பதிவு சான்றிதழ் அதற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 2024 ஜூலை 2-க்கு முன் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் பதிவு கட்டணமின்றி இணையவழி முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த வழிமுறைகளை பின்பற்றி கடைகள் மற்றும் நிறுவனங்களின் பதிவு, திருத்தங்கள் மேற்கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications