விஷ கசாயம் கொடுக்கும் முன்பு.. ஷெரானை பாலியல் உறவுக்கு அழைத்த கிரீஷ்மா.. பகீர் வாக்குமூலம்
ஷெரானுக்கு விஷம் கொடுப்பதற்கு முன்னர் அவரை உறவுக்கு அழைத்ததாக கிரீஷ்மா வாக்குமூலம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே ஷெரானுக்கு விஷம் கொடுப்பதற்கு முன்னர் அவருக்கு பல முறை போன் செய்து உறவுக்கு வருமாறு கிரீஷ்மா அழைத்ததாக தனது வாக்குமூலத்தில் கூறினார். இந்த தகவல் போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
தமிழக- கேரள எல்லையோரம் உள்ளது பாறசாலை எனும் பகுதி. இந்த பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். இவர் கல்லூரி இறுதியாண்டு மாணவர். இவர் கடந்த ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டு உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு இவரது காதலி கிரீஷ்மாதான் காரணம் என சந்தேகிக்கப்பட்டது. இதுகுறித்து ஷாரோன் ராஜின் குடும்பத்தினரும் கிரீஷ்மா மீது குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த மரணம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாரும் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் பல திடுக் தகவல்கள் வெளியே வந்தன. கிரீஷ்மாவுக்கு பணக்கார இடத்தில் அவருடைய தாயும் தாய்மாமாவும் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் தனது மகளின் ஜாதகத்தை கொண்டு சென்று ஜோஷியரிடம் காட்டிய போது அவர் கூறிய தகவலால் கிரீஷ்மா குடும்பம் அதிர்ந்தது.

ஜாதகம்
அதாவது கிரீஷ்மா ஜாதகத்தின்படி அவருக்கு முதல் கணவர் உடனே இறந்துவிடுவார் என்றும் இரண்டாவது கணவர்தான் உயிருடன் இருப்பார் என்றும் அவருடன்தான் கிரீஷ்மா வாழ முடியும் என்றும் தெரிவித்துள்ளார். கிரீஷ்மாவுக்கு பணத்தாசை காட்டிய தாய், தாய்மாமா உள்ளிட்டோர் பக்காவாக பிளான் செய்துள்ளனர்.

கிரீஷ்மா போன்
அதன்படி ஷாரோனுக்கு கிரீஷ்மா போன் செய்து தனது வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் நான் உன்னுடன் வந்துவிடுகிறேன், இருவரும் எங்காவது சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதை நம்பிய ஷெரான், கிரீஷ்மா சொன்னது போல் வீட்டை விட்டு ஓடி வந்து ஒரு கோயிலில் தாலியையும் கட்டியுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லை
இதையடுத்து தனது வீட்டில் யாரும் இல்லை என கூறி வீட்டிற்கு அழைத்து சென்ற கிரீஷ்மா, ஷெரானுக்கு ஒரு குளிர்பானத்தை கொடுத்துள்ளார். இந்த குளிர்பானத்தில் எதோ விஷத்தையும் கிரீஷ்மா கலந்துள்ளார். இந்த விஷத்தால் பாதிக்கப்பட்ட ஷெரானுக்கு அவ்வப்போது வாந்தி வந்துள்ளது. அப்போது செயலிழந்த உடல் உறுப்புகள் வெளியே வரத் தொடங்கின.

ஷெரானின் உறுப்புகள்
இதையடுத்து மருத்துவமனையில் சேர்த்தபோதுதான் ஷெரானின் உடலில் உறுப்புகள் செயலிழந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி ஷெரான் உயிரிழந்தார். பின்னர் அவரது குடும்பத்தினர் புகாரின் பேரில் கிரீஷ்மா, அவரது தாய், தாய்மாமா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் காவல் நிலையத்தில் அங்கிருந்த கிருமிநாசினியை குடித்து கிரீஷ்மா தற்கொலைக்கு முயன்றார்.

விசாரணை
இந்த நிலையில் கிரீஷ்மாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி அதை குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்துள்ளனர். அதில் ஷெரான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது தன்னுடைய உறவினர் ஒருவரிடம் கிரீஷ்மா தனக்கு விஷம் கலந்த ஒரு கசாயத்தை கொடுத்ததாக தெரிவித்திருந்தார். அது போல் கிரீஷ்மாவும் ஷெரானும் பல முறை உறவு கொண்டுள்ளனர்.

உறவுக்கு அழைத்த கிரீஷ்மா
அக்டோபர் 13 , 2022 அன்று இரவு இருவரும் போனில் ஒரு மணி நேர் 7 நிமிடங்களுக்கு பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான பேச்சுகளை பேசியுள்ளனர். மேலும் அக்டோபர் 14 ஆம் தேதி காலை 7.35 மணி முதல் ஷெரானை போனில் தொடர்பு கொண்ட கிரீஷ்மா தனது வீட்டில் உடலுறவுக்கு வருமாறு அழைத்துள்ளார். மேலும் ஷெரானுடன் போனில் செய்த உரையாடல்களை கிரீஷ்மா டெலிட் செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரு வேளை போலீஸில் சிக்கினால் டெலிட் செய்த உரையாடல்களை மீட்டெடுக்க முடியுமா என்பது குறித்தும் கூகுள், யூடியூப்களில் தேடியுள்ளார்.

திருமணம்
முதல்முதலாக இருவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காதல் ஏற்பட்து. இதையடுத்து 2022 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி ராணுவ வீரருடன் கிரீஷ்மாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. எனினும் கிரீஷ்மா, ஷெரானுடனான காதலை தொடர்ந்துள்ளார். கடந்த மே மாதம் ஷெரான் கிரீஷ்மா கழுத்தில் அவருடைய வீட்டிலேயே தாலி கட்டியுள்ளார். மீண்டும் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் மீண்டும் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் ஒரு ஹோட்டலில் இருவரும் உறவு கொண்டுள்ளனர்.

பாராசிட்டாமல் சிரப்
இது போல் அவ்வப்போது இருவரும் சந்திக்கும் போதெல்லாம் உறவு கொண்டுள்ளனர். இந்த நிலையில்தான் ராணுவ வீரருடன் திருமணம் செய்யும் தேதி நெருங்கியதால் ஷெரானை எப்படியாவது கழற்றிவிட கிரீஷ்மா பிளான் செய்துள்ளார். இதற்காக கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி பாராசிட்டாமல் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக கொடுத்தால் என்ன ஆகும் என்பதை பார்த்துள்ளார். இதற்காக கன்னியாகுமரியில் ஒரு கடையில் இரு பாட்டில்களில் ஜூஸை வாங்கிய கிரீஷ்மா, ஷெரானின் கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு பாத்ரூமுக்கு சென்று ஒரு ஜூஸ் பாட்டிலில் பாராசிட்டாமல் சிரப்பை கலந்துள்ளார்.

கசப்பு மருந்து
பின்னர் அந்த ஜூஸை ஷெரானுக்கு கொடுத்துள்ளார். அப்போது ஜூஸ் கசப்பாக இருந்ததால் ஷெரான் குடிக்கவில்லை. இதனால் மருந்து கலக்காத ஜூஸை இருவரும் குடித்துள்ளனர். பின்னர் கடந்த நவம்பர் மாதம் கடைசியாக ஷெரானை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார் கிரீஷ்மா. அங்கு அவரிடம் என் மீது உனக்கு காதல் இருந்தால் நான் கொடுக்கும் கசப்பு கசாயத்தை குடி பார்ப்போம் என கூறியுள்ளார். காதலி மீது கண்மூடித்தனமான அன்பு இருந்த ஷெரான், கிரீஷ்மா கொடுத்த கசாயத்தை குடித்துள்ளார். இதன்பிறகு கசப்பு சுவை நீங்க வேறு ஒரு இனிப்பு ஜூஸையும் கிரீஷ்மா கொடுத்துள்ளார்.

ஷெரான் பலி
இந்த ஜூஸை குடித்ததும் உடல் ஒரு மாதிரி இருக்கவே தனது நண்பரை வரவழைத்து அவருடன் பைக்கில் ஷெரான் வீடு திரும்பினார். அப்போது திரும்பும் வழியெல்லாம் ஷெரான் வாந்தி எடுத்து வந்துள்ளார். அப்போது அந்த நண்பரிடம், கிரீஷ்மா எனக்கு கசாயம் கொடுத்து ஏமாற்றிவிட்டார் என ஷெரான் கூறியுள்ளார். இதையடுத்து சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு ஷெரான் உயிரிழந்துவிட்டார். ஷெரானை கொல்ல கிரீஷ்மா பயன்படுத்திய பூச்சிக் கொல்லி மருந்தில் இருந்த லேபிளை நீக்கிய கிரீஷ்மா, அந்த காலி பாட்டிலை பக்கத்தில் இருந்த ரப்பர் தோட்டத்தில் புதைத்துவிடுகிறார். இவ்வாறு குற்றப்பத்திரிகை சொல்கிறது. இந்த சம்பவத்தில் கிரீஷ்மாவின் தாய்க்கு இந்த கொலை குறித்து நன்கு தெரியும். அவருடைய தாய்மாமா ஆதாரங்களை அழிக்க உதவியுள்ளார்.












Click it and Unblock the Notifications