பாஸ்டரின் பலான வேலை.. 13 வயது சிறுமி கர்ப்பம்.. பாவம் செய்துவிட்டு பாவ மன்னிப்பா? குமுறுதே குமரி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மத போதகரை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் பாதிரியார் பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததை அடுத்து சிறுமியைப் பெற்ற தாயிடம், அந்த பாஸ்டர் பாவமன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் அதிக அளவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இந்நிலையில், பாவம் செய்தால் மன்னிப்பு வழங்க வேண்டிய பாதிரியாரே பாவம் செய்து சிறையில் தள்ளப்பட்டு இருக்கிறார். தக்கலை அருகே செம்பருத்திவிளை பகுதியைச் சேர்ந்தவர் 63 வயதான ஜான் ரோஸ். இவர் பெருஞ்செலும்பு கரும்பாலை பகுதியில் ஜெபக்கூடம் நடத்தி வருகிறார்.
அங்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் ஜெபம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரும் தனது எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது மகளுடன் ஜெபக்கூடத்திற்கு சென்று வந்திருக்கிறார். அப்போது அந்த சிறுமிக்கு நான் ஆசீர்வாதம் செய்து வைக்கிறேன் எனக் கூறி தொடர்ந்து பலமுறை தனிமையில் சந்தித்து இருக்கிறார் ஜான் ரோஸ். இந்நிலையில் மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அவரது பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதனால் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற பெற்றோர் இது தொடர்பாக மாணவியிடம் கேட்டுள்ளனர். அப்போது பாதிரியார் ஜான் ரோஸ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக திடுக்கிட வைக்கும் தகவலை கூறினார் மாணவி. இது தொடர்பாக போதகரிடம் கேட்டபோது அவரது பெற்றோர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் மாணவி மற்றும் பெற்றோரை கேரள மாநிலம் கொல்லத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். அப்போது மாணவிக்கு குழந்தை பிறந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்கள் மருத்துவமனைக்கு வந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கர்ப்பமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகமே கேரளா போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்ததும் ஜான் ரோஸ் தலைமறைவாகிவிட்டார். இது தொடர்பான புகார் கேரளா போலீஸ் இடமிருந்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை அடுத்து ஜான் ரோஸ் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜான்ரோஸை தேடி வந்தனர். மேலும் கோவையில் அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்த நிலையில் உடனடியாக அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
ஜான் ரோஸுக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றத்தை மறைத்ததாக அவரது மனைவி ஜலின் பிரபா, மகன் பிரதீப் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஜான் ரோஸ் இது தொடர்பாக மாணவியின் பெற்றோரிடம் பாவமன்னிப்பு கேட்பதாக கூறி இருக்கிறார் .ஆனால் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அவரை கம்பி எண்ண வைத்திருக்கின்றனர் பெற்றோர். பாவம் செய்தால் மன்னிக்க வேண்டிய பாதிரியாரே பாவம் செய்துவிட்டு சிறையில் இருக்கும் சம்பவம் கன்னியாகுமரியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications