‛‛6 அறைகள் + கிரானைட் சுவர்கள்’’.. மோடி தியானம் செய்யும் விவேகானந்தர் மண்டபத்தின் வசதிகள் இதுதான்
கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இன்று கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் பாறை நினைவு மண்டபத்துக்கு வந்துள்ளார். இங்கு 45 மணிநேரம் தியானம் செய்யும் பிரதமர் மோடி நாளை மறுநாள் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு செல்கிறார். இந்நிலையில் தான் விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? என்பது பற்றிய விபரம் வருமாறு:
லோக்சபா தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி இன்று முதல் நாளை மறுநாள் பிற்பகல் வரை தங்க உள்ளார்.

இந்த சமயத்தில் பிரதமர் மோடி 45 மணிநேரம் தியானம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்கள் தியானம் செய்யும் விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள சிறப்பம்சங்களின் விபரம் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி.. இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலின் சந்திக்கும் இடமாக உள்ளது. இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள இந்த கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தருடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. இதனால் தான் கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே சுவாமி விவேகானந்தருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விவேகானந்தருக்கு நினைவிடம் அமைத்ததன் பின்னணியில் முக்கிய வரலாற்று நிகழ்வு உள்ளது.
அதாவது சுவாமி விவேகானந்தரின் அமெரிக்கா உலக ஆன்மீக மாநாட்டு பேச்சு என்பது மிகவும் பிரபலம். ‛மை டியர் சிஸ்டர்ஸ் அண்ட் பிரதர்ஸ்' என 1893ம் ஆண்டில் அமெரிக்காவின் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் பேசுவதற்கு முன்பு கன்னியாகுமரியில் தியானம் செய்தார். 1982 டிசம்பரில் விவேகானந்தர் கன்னியாகுமரி கடலில் நீந்தி அங்குள்ள பாறைக்கு சென்று தியானம் செய்து பாரத மாதாவை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் நினைவாக அந்த பாறையில் விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது.
இந்த நினைவு மண்டபம் கட்டும் யோசனையை கூறியவர் ஆன்மீக தலைவரான ஏக்நாத் ரானே. அதன்பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் பணி 1964ல் தொடங்கி 1970ல் முடிவடைந்தது. இங்கு 2 முக்கிய கட்டுமானம் உள்ளது. ஒன்று விவேகானந்தர் மண்டம். இன்னொன்று ஸ்ரீபாத மண்டபம். ஸ்ரீபாத மண்டபத்தை பொறுத்தவரை இந்து தெய்வமான பகவதி அம்மன் கால் பதித்த இடத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் 'கர்ப்ப கிரகம்' (சன்னதி), 'உள் பிரகாரம்', வெளிப்பிரகாரம் உள்ளது.
அதேவேளையில் விவேகானந்தர் மண்டபம் என்பது தியான மண்டபம், முக பண்டபம், சபா மண்டபம் உள்ளடக்கி உள்ளது. இதில் 'தியான மண்டபத்தின்' வடிவமைப்பு இந்தியாவின் பல்வேறு கோவில்களின் கட்டமைப்புகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இந்த மண்டபம் 6 அறைகளை கொண்டுள்ளது. கடல் காற்றில் சிதிலமைடையாமல் இருக்கும் வகையிலான கிரானைட் சுவர்களால் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
மண்டபத்தின் உள்ளே நல்ல காற்றோட்டம் கிடைக்கும். விளக்குகள் உள்ளன. அதேபோல் 'சபா மண்டபத்தில் 'பிரலிமா மண்டபம்' எனும் இடத்தில் விவேகானந்தர் சிலை உள்ளது. இங்குள்ள சுவாமி விவேகானந்தரின் பார்வை நேரடியாக ஸ்ரீபாத மண்டபத்தை நோக்கி இருக்கும். இந்த ஸ்ரீபாத மண்டபத்தில் பகவதி அம்மன் கால்பதித்த இடம் உள்ளது.
பொதுவாக விவேகானந்தர் மண்டபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட யாருக்கும் தங்க அனுமதி இல்லை. விவேகானந்தர் மண்டபத்தை பார்க்க செல்லும் மக்கள் மாலையில் கரைக்கு திரும்ப வேண்டும். ஆனால் பிரதமர் மோடி இன்று முதல் நாளை மறுநாள் வரை விவேகானந்தர் மண்டபத்தில் தங்கி தியானம் செய்கிறார். பிரதமர் மோடியின் வருகைக்காக அவருக்காக சில முக்கிய பொருட்கள் விவேகானந்தர் மண்டபத்துக்கு முன்கூட்டியே வாங்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications