தமிழர்களின் பெருமிதம் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை எட்டி கூடப் பார்க்காமல் புறக்கணிக்கும் மோடி?
கன்னியாகுமரி: தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் மோடி 3 நாட்கள் நடுக்கடலில் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்கிறார்; நடுக்கடலில் அதே விவேகானந்தர் பாறைக்கு அருகில் விண்முட்ட 133 அடி உயரத்தில் நிற்கும் தமிழர்களின் வரலாற்றுப் பெருமிதமான அய்யன் திருவள்ளுவர் சிலையை எட்டிக் கூட பார்க்காமல் புறக்கணிக்கப் போகிறாரா பிரதமர் மோடி? என புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
லோக்சபா தேர்தல் இறுதி கட்ட வாக்குப் பதிவு நாளை மறுநாள் நடைபெறும் நிலையில் பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு பயணம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்வதே தேர்தல் நடத்தை விதி மீறல் என்பது முதன்மை குற்றச்சாட்டு.

அடுத்ததாக ஒடிஷாவில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது என தமிழர்களைத் திருடர்கள் என பழிசுமத்தினார். இதற்கு தமிழ்நாட்டில் பெரும் கண்டனம் குவிந்தது. உத்தரப்பிரதேசத்தில் பேசுகையில், உங்களை தமிழர்கள் இழிவாகப் பேசுகிறார்கள் என சண்டை மூட்டிவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் புதிய சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. கன்னியாகுமரியில் நடுக்கடலில் 3 நாட்கள் மோடி தியானம் செய்கிறார். பகவதி அம்மன் கோவிலுக்குப் போகிறார் என்பது எல்லாம் அவரது நிகழ்ச்சி நிரல். ஆனால் இந்த பட்டியலில் விவேகானந்தர் பாறைக்கு அருகிலேயே இருக்கும் தமிழர்களின் அடையாளம், வரலாற்றுப் பெருமிதமான 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை எட்டிக் கூட பார்க்காமல் இருக்கப் போகிறாரா மோடி? என்பதுதான் இந்த சர்ச்சை.
கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை அமைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி இந்த வானுயர வள்ளுவர் சிலையை கருணாநிதி திறந்து வைத்து ஆகச் சிறந்த வரலாற்றை உருவாக்கினார். திருவள்ளுவர் சிலையின் பீடம் மொத்தம் 38 அடி. அதாவது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிக்கக் கூடியது. எஞ்சிய 95 அடி என்பது பொருள், இன்பத்துப் பாலின் 95 அதிகாரங்களைக் குறிக்கும் வகையிலானது என்பது பெரும் சிறப்புக்குரியது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications