காங்கிரஸ் நிர்வாகியுடன் ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் திடீர் மீட்டிங்.. குமரியில் நடந்த பரபரப்பு
குமரி: குமரி அருமனையில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜுவுடன் காங்கிரஸ் நிர்வாகி பினுலால் சிங் சந்தித்து பேசினார். தவெகவினர் பங்கேற்பால் கிறிஸ்துமஸ் விழாவை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புறக்கணித்த நிலையில் பினுலால் சிங் சந்தித்து பேசினர்.
குமரி மாவட்டம் அருமனையில் இன்று 28-வது கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. மதம் கடந்த நல்லிணக்க விழாவாக ஆண்டுதோறும் அருமனை கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

இதேபோல் விசிகவினரும் இந்த விழாவில் பங்கேற்றனர். விஜய்யின் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டதால் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கமாக காங்கிரஸ் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் இந்த விழாவில் பங்கேற்று வரும் நிலையில் இன்று தவெகவினர் வருகையின் காரணமாக காங்கிரசார் இந்த விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
எனினும் காங்கிரஸ் நிர்வாகி பினுலால் சிங் இந்த விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ் உள்ளிட்ட தவெகவினரை காங்கிரஸ் நிர்வாகி பினுலால் சிங் சந்தித்து பேசினார். தவெகவினர் பங்கேற்றதால் கிறிஸ்துமஸ் விழாவை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புறக்கணித்த நிலையில் பினுலால் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications