பார்க்கத்தான் பிரமாண்டம்.. உண்மையில் திமுக கூட்டணி ஒரு காலி டப்பா.. பொன் ராதாகிருஷ்ணன் தாக்கு
கன்னியாகுமரி: பார்ப்பதற்கு பிரம்மாண்டம் போல காட்சிதரும் தி.மு.க. கூட்டணி. உண்மையில் அது சரக்கு இல்லாத காலி டப்பா மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக பிரசாரம் செய்துவரும் பி.ஆர். பாண்டியன் அரசியல் பின்புலம் உடையவர். விவசாயிகளின் தலைவராக அல்லாமல் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்டுவருகிறார்.
மதசார்பின்மைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக நாஞ்சில் சம்பத் கூறியிருக்கிறார். அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறிய நாஞ்சில்சம்பத் மீண்டும் வந்திருப்பதால் தமிழக மக்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஐ.ஜெ.கே. கட்சி தி.மு.க.வில் இணைந்திருப்பதால் பா.ஜ.க.விற்கு எந்த பாதிப்பும் இல்லை. பாரிவேந்தர் மட்டுமல்ல எவர் எங்கு சென்றாலும் பா.ஜ.க. கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. பார்ப்பதற்கு பிரம்மாண்டம் போல காட்சிதரும் தி.மு.க. கூட்டணி சரக்கு இல்லாத காலி டப்பா.
பாகிஸ்தான் மீதான தாக்குதல் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு தெரியவில்லை எனக்குற்றம் சாட்டுவது சரியல்ல. தெரிய வேண்டிய அனைவருக்கும் அது தெரிந்துள்ளது. பாகிஸ்தான் மீதான தாக்குதல் சம்பவத்தை பா.ஜ.க. அரசியல் செய்வதாக கூறுவது சரியல்ல.
பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்ததன் மூலம் கிடைத்த வெற்றியை அறிவிக்கும் கடமை பிரதமருக்கு உள்ளது. வெற்றியை கொண்டாடும் முதல் கடமை பிரதமருக்கும், இரண்டாவது கடமை எதிர்கட்சியின் கடமை, மூன்றாவது அனைத்து கட்சி தலைவர்களின் கடமை, நான்காவது அனைத்து மக்களின் கடமை என்றார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications