கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தல்: பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டி - பாஜக அறிவிப்பு
கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என டெல்லி தலைமை அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வசந்தகுமாரிடம் தோல்வியடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார்.
Recommended Video

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தொகுதியில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார் பொன். ராதாகிருஷ்ணன். அவரை எதிர்த்து போட்டியிட்ட எச். வசந்தகுமார் தோல்வியடைந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எச். வசந்தகுமார் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணன் தோல்வியடைந்தார்.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றிய வசந்த குமார் கடந்த ஆண்டு மரணமடைந்தார். இதனையடுத்து கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6ஆம் தேதி கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பாஜக சார்பில் பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுவார் என டெல்லி பாஜக தலைமை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் எச். வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். பொன். ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் பலமான வேட்பாளராக இருக்கவேண்டும் என்று நினைக்கிறது காங்கிரஸ் தலைமை. பிரியங்கா காந்தி போட்டியிடவும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார் கார்த்தி சிதம்பரம்.
கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன் ஜெயித்தால் தமிழ்நாட்டிற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர் பாஜகவினர்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications