200 ரூபாயை காணோம்.. எடுத்தியா.. கர்ப்பிணி மனைவியை அடித்தே கொன்ற கணவன்!
200 ரூபாய்க்காக 5 மாத கர்ப்பிணியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி: 200 ரூபாயை காணவில்லை.. இதுக்காக ஒரு கொலையே நடந்து முடிந்துவிட்டது.
நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த தம்பதி மணிகண்டன் - சுபிதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இப்போது சுபிதா 3-வது முறை கர்ப்பமாக இருந்துள்ளார். இப்போது அவருக்கு 5 மாதம்!!
தம்பதி இடையே எப்போதுமே சண்டை நடப்பது வழக்கம். சின்ன விஷயம் கூட கொஞ்ச நேரத்தில் தகராறாக மாறிவிடும். இதுபோல ஒரு சண்டைதான் சில தினங்களுக்கு முன்பு நடந்துள்ளது.

200 ரூபாய்
வீட்டில் மணிகண்டன் 200 ரூபாயை வைத்திருந்திருக்கிறார். அதை காணவில்லை என்றுதான் சண்டை ஆரம்பமானது. "200 ரூபாய் பணத்தை எடுத்தியா?" என்று சுபிதாவை மணிகண்டன் கேட்டுள்ளார். அதற்கு அவர் "பணம் இருந்தது எனக்கு தெரியாது, அதை எடுக்கவில்லை, பார்க்கவும் இல்லை" என்று சொல்லியுள்ளார்.

வயிற்று வலி
ஆனால் அதனை நம்பாத மணிகண்டன், சுபிதாவை சரமாரியாக அடிக்க ஆரம்பித்துவிட்டார்.இதில் சுபிதா படுகாயமடைந்தார். பின்னர் திடீரென வயிற்று வலி ஏற்பட்டு அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சுபிதாவை மீட்டு, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மணிகண்டன் கைது
சபிதா ஆனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், கர்ப்பிணியான சுபிதா உயிரிழந்தார். இது சம்பந்தமாக தகவலறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்துள்ளனர்.

தாயும் தற்கொலை
மணிகண்டன் எப்பவுமே இப்படித்தனாம். ஏற்கனவே தனது தாய் பேபியிடம் அடிக்கடி பிரச்சினையும், தகராறும் செய்து வந்து கொண்டிருந்ததால், அவர் தற்கொலையே செய்து கொண்டாராம். 200 ரூபாய்க்காக கணவன் 5 மாத கர்ப்பிணி மனைவியை அடித்தே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications