கன்னியாகுமரி இளம் பெண்ணுடன் குவாரி அதிபர் உல்லாசம்.. கணவருக்கு பறந்த வீடியோ.. சிக்கியது எப்படி?
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், இளம் பெண்ணுடன் தனிமையில் இருந்த வீடியோவை அவரது கணவருக்கு அனுப்பி மிரட்டியிருக்கிறார்கள் சிலர். இந்த விவகாரத்தில் குவாரி அதிபர் உள்பட 3 பேர் சிக்கியது எப்படி என்பதை பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 29 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மார்த்தாண்டம் அடுத்த வாள்வச்சகோஷ்டம் பகுதியை சேர்ந்த 46 வயதாகும் பிரான்சிஸ் என்பவர் திருநெல்வேலி மாவட்டத்தில் கல்குவாரி நடத்தி வருகிறார். இங்குதான் கன்னியாகுமரி இளம்பெண் வேலை பார்த்து வந்தார். அப்போது பிரான்சிசும், இளம்பெண்ணும் நெருங்கி பழகியுள்ளார்கள்.

அதன்படி பிரான்சிஸ் அடிக்கடி இளம்பெண்ணை தனக்கு சொந்தமான விருந்தினர் விடுதிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதனை வீடியோவும் எடுத்து வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து தொழில் தொடங்க முடிவெடுத்தனர். இதற்காக இளம்பெண் ரூ.3 லட்சமும், 5 பவுன் தங்க நகையும் பிரான்சிசிடம் கொடுத்தாராம்.
ஆனால் குவாரி அதிபர் பிரான்சிஸ் தொழிலில் கிடைத்த வருமானத்தை இளம்பெண்ணுக்கு கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கொடுத்த நகை, பணத்தை இளம்பெண் திருப்பி கேட்டுள்ளார். இது பிரான்சிசுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது..
ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இளம்பெண்ணை தனது குவாரியில் வேலை பார்க்கும் சிராயன்குழியை சேர்ந்த ராபின் (35) என்பவரின் வீட்டிற்கு வருமாறு அழைத்திருக்கிறார். அங்கு வைத்து பணத்தையும், நகையையும் தருவதாக பிரான்சிஸ் கூறியிருக்கிறார். அதன்படி இளம்பெண் ராபினின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு வைத்து ராபின் இளம்பெண்ணிடம் நீயும், பிரான்சிசும் உல்லாசமாக இருந்த 48 வீடியோக்கள் தன்னிடம் இருக்கிறது. அதை இணையதளத்தில் போடாமல் இருக்க தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் மறுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம்.
இதனிடையே பிரான்சிசின் மனைவி வனஜகுமாரியும் இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக இளம் பெண் குற்றம்சாட்டினார். ஏனெனில் வனஜகுமாரி தனது கணவர் பிரான்சிசுடன் இளம்பெண் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளிநாட்டில் இருக்கும் அவரது கணவருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் கணவர் உடனே சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்ததுடன், இதுகுறித்து கணவர், இளம்பெண்ணிடம் கேட்டு அடித்துள்ளார். தனது கணவருக்கு இச்சம்பவம் தெரிந்து விட்டதே என்று இளம்பெண் விரக்தியடைந்தார்.
இதையடுத்து அவர் பிரான்சிஸ் உள்பட 3 பேரிடமும் சென்று ஏன் இப்படி செய்தீங்க என கேட்டாராம். இதைகேட்ட ராபின் நீ ஒரு முறையாவது எனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று தவறாக நடக்க முயற்சித்தாராம். இதையடுத்து அங்கிருந்து தப்பி சென்ற இளம்பெண் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பிரான்சிஸ், வனஜகுமாரி மற்றும் ராபின் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications