Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரி அருகே சொந்த வீட்டை இப்படி ஒரு கோலத்தில் யாருமே பார்க்க கூடாது.. மிரண்ட பேராசிரியை

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கேரக்டரில் கருணாஸ் நடித்திருப்பார். அந்த படத்தில் ஒரு நீதிபதி வீட்டில் இருந்து டெம்போவை வைத்து பொருட்களை எல்லாம் திருடி செல்வார்கள். அதேபோன்ற பாணியில் பேராசிரியை வீட்டில் நகை, டி.வி., கியாஸ் சிலிண்டர், பாத்திரங்கள் என அனைத்து பொருட்களையும் மர்ம நபர்கள் அள்ளிச்சென்றுள்ளார்கள். வீட்டிற்கு வந்த பேராசிரியை, ஒரு பொருளும் இல்லாமல் வெறும் வீடாக இருந்ததை கண்டு ஆடிப்போனார்.. எப்படி நடந்தது என்று பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள் செண்பகராமன்புதூரில் அரசு மருத்துவமனை இருக்கிறது. இந்த பகுதியில் 45 வயதாகும் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை பார்க்கிறார். இவருடைய மனைவி இவாஞ்சலினுக்கு 40 வயது ஆகிறது. இவர் முப்பந்தலில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.

robbers stole TV gas cylinders from the house of a Kanyakumari professor

சதீஷ்குமார் தூத்துக்குடியில் வேலை பார்த்து வரும் நிலையில் சனிக்கிழமைகளில் மட்டுமே ஊருக்கு வருவார் என கூறப்படுகிறது. இதன் காரணமாக பேராசிரியை இவாஞ்சலின் அவ்வப்போது, ஆரல்வாய்மொழியில் உள்ள தனது தந்தை வீட்டில் சென்று தங்குவார். அதன்படி அவர் கடந்த வியாழக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு ஆரல்வாய்மொழியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பின்னர் நேற்று மாலையில் வீட்டுக்கு வந்தார். முன்பக்க கதவைத் திறந்து உள்ளே சென்ற போது பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு ஆடிப்போனார். பின்னர் படுக்கை அறையில் உள்ள பீரோவை சென்று பார்த்த போது அதுவும் திறந்து கிடந்தது. பீரோவில் வைத்திருந்த தங்க கம்மல், மோதிரம் என 19 கிராம் நகைகள் கொள்ளை போயிருந்தது.

பின்னர் மற்ற அறைகளுக்கு சென்று பார்த்த போது சமையல் அறையில் இருந்த மிக்சி, கிரைண்டர், கியாஸ் சிலிண்டர், சில்வர் பாத்திரங்கள், துணிமணிகள் மற்றும் முன் அறையில் இருந்த டி.வி. என அனைத்து பொருட்களும் கொள்ளை போய் வெறும் வீடாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சூர்யா நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான படம் நந்தா. இந்த படத்தில் லொடுக்கு பாண்டி என்ற திருடன் கேரக்டரில் நடிகர் கருணாஸ் நடித்திருப்பார். அதில் நீதிபதி ஒருவரின் வீட்டுக்கு மினி டெம்போவுடன் சென்று வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் திருடி செல்வார்.பணி மாறுதல் வந்துள்ளதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்களை நம்ப வைப்பார்.. அதுபோல் யாரோ மர்ம நபர்கள் டெம்போவில் வந்து வீட்டின் பின் வாசல் அருகே உள்ள சாலையில் நிறுத்திவிட்டு, கதவை உடைத்து அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து சென்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து டிஎஸ்பி லலித்குமார், ஆரல்வாய்மொழி சப்- இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். நாகர்கோவிலில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகள் பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். சினிமா பாணியில் கன்னியாகுமரி பேராசிரியை வீட்டில் இருந்து அனைத்து பொருட்களையும் திருடர்கள் அள்ளிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+